6. சமய இலக்கியம்

சிவன்

பாடல்
Poem


சிவன்

தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண் மதிசூடி

காடுடைய சுடலைப் பொடி பூசியென் உள்ளங் கவர் கள்வன்

ஏடுடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த அருள் செய்த

பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மானி வனன்றே!

- தேவாரம்