6. சமய இலக்கியம்

சமயப் பாடல்கள்

பொது அறிமுகம்
General Introduction


அன்புள்ள மாணவர்களே! வணக்கம்

மக்கள் சமயங்கள் வழி இறைவனை வணங்குகின்றனர். சமயம் என்பது மக்கள் கூட்டமாகச் சேர்ந்து இறையை வணங்க ஏற்படுத்திக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். அச்சத்தைப் போக்கி மனிதனுக்கு அமைதி தரவே சமயங்கள் எழுந்தன. இச்சமய அமைப்புகள் தத்தம் சமயக் கொள்கைகளைத் தமிழ்மொழி வாயிலாகப் பரப்பின. இதனால் தமிழில் பல படைப்புகள் உருவாகின. இவ்வாறு சமயங்களால் உண்டான படைப்புகளுக்குத் தமிழில் சமய இலக்கியம் என்று பெயர் வழங்கப் பெறுகிறது. இதனைப் பக்தி இலக்கியம் என்றும் பகர்வர். தமிழ்மொழியில் பாடப் பெற்ற சில பக்திப் பாடல்கள் இங்கு உங்களுக்குப் பாடமாக உள்ளன.