iv |
மொழி நூலார் ‘யா’ எனும் வினையடியில் இருந்து யாக்கை, யாத்தல்,
யாப்பு முதலிய சொற்கள் தோன்றின என்பர். யாப்பதிகாரம் என்பதற்குச்
செய்யுள் இலக்கணம் கூறும் நூற்பகுதி என்று தொல்காப்பியப் பொருளதிகார
உரையாசிரியர் பேராசிரியர் (சூத்.313) குறிப்பிட்டுள்ளது சுட்டத் தக்கது.
மேலும் பிங்கல நிகண்டு யாப்பு என்பதற்கு, ‘செய்யுள்’ என்று பொருள் உரைக்கிறது. ஆக, செய்யுள் என்பதை முற்கால வழக்காகவும் யாப்பு
என்பதைப் பிற்கால வழக்காகவும் கொள்ளலாம்.
|
‘யாத்தல்’ என்றால் கட்டுதல் என்பது பொருள். இன்றுகூட நாட்டுப்புற
வழக்கில் ‘பாட்டுக் கட்டுதல்’ எனும் சொல் வழக்கில் உள்ளது
நினைக்கத்தக்கது. ஏழுவகைத் தாதுக்களால் கட்டப்பட்டது யாக்கை (உடல்)
ஆகும். அதே போன்று எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, பா
எனும் ஏழு வகை உறுப்புக்களால் அமையப் பெற்றதால் யாப்பு என்று
பெயர் பெற்றது என்பர்.
|
உவமை இயல் வளர்ந்து பின்னர் ‘அணியிலக்கணம்’ ஆயிற்று. இவ்வாறு
தமிழில் உருவான எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி எனும் ஐந்து
இலக்கணப் பகுப்புப் பற்றி முதன் முதலாக வீரசோழியம் குறிப்பிடுகிறது.
|
ஐந்து வகை இலக்கணப் பகுப்பில் ‘யாப்பு’ எனும் இலக்கணம் பிற
இலக்கண வகைகளைக் காட்டிலும் சிறப்பாகக் கருதத்தக்கது.
|
‘நாகரிகம் இல்லாத மொழிகளிலே மக்களின் நல்லெண்ணங்களைக்
காட்டும் சொற்களும், சொற்றொடர்களும் கருமணல்களோடு கலந்து கிடந்த
பொற்றுகள்கள் போல், அல்லாத பலவுடன் மயங்கி ஓரொழுங்குமின்றிச்
சிதர்ந்து கிடக்கும்.நாகரிகம்அமைந்தமொழியிலோசிதர்ந்துகிடந்த
| |