xxvii

காலத்தில் (985-1014) குணசாகரரின் மாணவரான அமிதசாகரர் வாழ்ந்தார் என்பது கொள்ளத்தக்கதேயாம்.

‘அமிதசாகர முனியைச் சயங்கொண்ட சோழமண்டலத்துத் தண்சிறு குன்ற நாட்டகத்து இருத்தி’ என்னும் நீடூர் கல்வெட்டுச் செய்தியால் அமிதசாகரர வேற்று நாட்டினர் என்றும், அவரைத் தம் நாட்டகத்து எழுந்தருளச் செய்து குளத்தூரில் இருக்கச் செய்தவன் கண்டன் மாதவன் முன்னோன் என்பதும் விளங்குகின்றன. கழுகுமலைக் கல்வெட்டால் குணசாகரர் பெயர் அறியப பெறுதலாலும் தம் சமயக் கோட்பாட்டைப் பரப்புதற்குச் சிலரைப் பிறநாடுகளுக்கு விடுத்தார் என்பது தெரிதலாலும பாண்டி நாட்டில் இருந்து வந்தவர் அமிதசாகரர் என்பது அறியத்தக்கது. ‘‘காரிகையின் அவையடக்கச் செய்யுளும் அமிதசாகரர் பாண்டி மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதை வலியுறுத்தும்’’1 என்பர்.

குணசாகரர் :

காரிகைக்கு உரைகண்டவர் குணசாகரர். அவரை அமிதசாகரரின் ஆசிரியராகக் கருதினாரும் உளர். ஆசிரியர் இயற்றிய நூலுக்கு மாணவர் உரை எழுதும் மரபுநிலை உண்டே யன்றி, மாணவர் யாத்த நூலுக்கு ஆசிரியர் உரை எழுதும் வழக்கம் இல்லை. அன்றியும், ‘‘தனக்கு வரம்பாகிய தவத்தொடு புணர்ந்த குணக்கடற் பெயரோன்’’ என்று அமிதசாகரரால் பாராட்டப்பெற்ற குணசாகரர், ‘‘இந்நூல் யாவராற் செய்யப் பட்டதோ வெனின், ஆரியம்


அமிதசாகரர்நாடு அவருடைய ஆசிரியர்க்குரிய பாண்டி மண்டலமே எனலாம். அவ்வபிமானம் பற்றிப் போலும் தொண்டை நாட்டில் இருந்து இயற்றிய காரிகை நூலை ஆண்டு அரங்கேற்றாது ‘தேனார் கமழ்தொங்கல் மீனவன் கேட்ப’ அப்பாண்டியனது அவை முன்பு இம்முனிவர் அரங்கேற்றிய தென்க. மீனவன் கேட்ப என்பதிலுள்ள வினை எச்சத்தை அருந்தவன் சொன்ன கன்னித் தமிழ் என்பதனுள் சொன்ன என்ற வினையுடன் கூட்டியும் பொருள் கூறலாம். ஆயினும் கேட்போர், களம் என்ற பாயிர விலக்கணம் அதனால் அமையாமையின் அஃது ஏற்புடைத்தன்று என்க. சாசனத் தமிழ்க் கவிசரிதம், பக்: 44.