xxvi
சிறுகுன்றநாட்டு மிழலையைச் சேர்ந்த ஊராக இருந்தது’’ என்பனவும்
பிறவும் இக் கல்வெட்டுச் செய்யுள்களால் அறியப் பெறுகின்றன. அமிதசாகரர் காலம்
:
கண்டன் மாதவன் முன்னோருள் ஒருவன் காரிகை செய்வித்தபடியால் அவன்
முதற் குலோத்துங்கன் காலத்திற்கு முற்பட்டவனே ஆவன். அன்றியும் தொண்டைநாடு
‘செயங்கொண்ட சோழ மண்டலம்’ என்று குறிக்கப் பெறுவது நோக்கத்தக்கது. செயங் கொண்ட
சோழன் என்பவன் முதல் இராசராசன். அவன் பெயராலேயே செயங் கொண்ட சோழ மண்டலம் என்னும்
பெயரைத் தொண்டை நாடு பெற்றது. ஆதலால், அவ் விராசராசன் காலத்திலேயே அமிதசாகரர்
இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாம். அவன் ஆட்சிக் காலம் கி.பி. 985 - 1014
என்க. இனி வேறொரு வழியாலும் இச் செய்தி உறுதியாம். அமிதசாகரர்
ஆசிரியர் பெயர் குணசாகரர் என்பது. ‘‘தனக்கு வரம்பாகிய தவத்தொடு
புணர்ந்த குணக்கடற் பெயரோன்’’ என்று யாப்பருங்கலப் பாயிரம்
குறிப்பதும், ‘‘தனக்கு எல்லை தானே ஆகிய துறவொடு பொருந்திய
குணசாகரப் பெயரோன்’’ என விருத்தியுரை கூறுவதும் அறிக.
அமிதசாகரர் நாடு:
மாறஞ்சடையன் என்னும் பாண்டியனது மூன்றாவது ஆட்சியாண்டுக்
கல்வெட்டுகள் இரண்டு பாண்டி நாட்டுக் கழுகுமலையில் உள்ளன.
அவற்றுள் குணசாகரர் என்னும் சமண சமய ஆசாரியர் ஒருவர், தம்
கோட்பாடுகளைப் பரப்புவதற்காகப் பரப்புநர் சிலரை நியமித்து அவர்களின்
உணவுக்காக நிலக்கொடை புரிந்த செய்தி கூறப் பெற்றுள்ளது. அதில்
வீரநாராயணன், உத்தமசீலன் என்னும் பெயர்கள் வருகின்றன. இவை
முதற் பராந்தகசோழனையும், உத்தமசோழனையும் குறிப்பன. அவர்கள்
காலம் முறையே கி.பி. 907 - 953; 970 - 985. ஆதலால்,அவர்களுக்குப்பின்
ஆட்சிக்குவந்துமுதல்இராசராசன்
|