முதற் கல்வெட்டுச் செய்யுள் குலோத்துங்கன் 38 ஆம்
ஆட்சியாண்டிலும், இரண்டாம் செய்யுள் அவன் 46 ஆம் ஆட்சியாண்டிலும்
எழுந்தனவாம்.
குலோத்துங்கன் என்னும் பெயருடன் மூவர் விளங்கியுள்ளனர். அவருள்
முதற் குலோத்துங்கனே நெடுங்காலம் ஆட்சி புரிந்தவன் (கி.பி.1070 - 1120).
இரண்டாங் குலோத்துங்கன் (கி.பி.1133 - 1150). மூன்றாங் குலோத்துங்கன்
(கி.பி. 1178 - 1218) ஆகிய இருவரும் 46 யாண்டுகள் கடந்த நெடுங்காலம்
ஆண்டனர் அல்லர். அதனால் இக் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெற்ற
வேந்தன் முதற் குலோத்துங்கனே என்பது வெளிப்படை.
‘‘முதற் குலோத்துங்கன் காலத்து வாழ்ந்தவன் கண்டன் மாதவன்
என்பான். அவன் சோழன் தலைமையில் குளத்தூர் மன்னனாக (தலைவனாக)
விளங்கினான்; அவன் காலத்தில் குளத்தூர் காரிகைக் குளத்தூர் என
வழங்கப் பெற்றது; அவன் முன்னோருள் ஒருவன் அமிதசாகர முனிவரைக்
குளத்தூர்க்கு அழைத்து இருக்கச் செய்து காரிகை நூல் இயற்றச் செய்தான்.
அச் சிறப்பால் அவ்வூர் ‘காரிகைக் குளத்தூர்’ எனப் பெயர் பெற்றது;
காரிகைக்குளத்தூர்செயங்கொண்டசோழமண்டலத்துச்
|