xxix

யாப்பருங்கலம் யாப்பருங்கலக் காரிகை
நூற்பா ஆசிரியத்தான் அமைந்தது - கட்டளைக்கலித்துறையான் அமைந்தது.
அவையடக்கம் இல்லை. - அவையடக்கம் உண்டு. (2,3)
ஆசிரியர் பெயரும், ஆசிரியர்க்கு
ஆசிரியர் பெயரும் அவர்சிறப்பும்
கூறப்பெற்றுள. (பாயிரம்)
- கூறப்பெறவில்லை.
அசைக்கு உறுப்பு 15 என்னும் (2) - அசைக்கு உறுப்பு 13 என்னும் (4)
இயலின் உட்பிரிவாக ‘ஓத்து’
   என்னும் சிறு பிரிவுளது.
- இல்லை.
விதியும், விதிவிலக்கும் அவ்வவ்
   விடங்களிலேயே கூறிச்செல்லும்
- விதியை உறுப்பியல் செய்யுளியல் களிலும், விதிவிலக்கை ஒழிபியலிலும் கூறிச்செல்லும்.
‘மாலை மாற்று’’ முதலிய சித்திரக்
கவிமாலை ஒழிபியலில் உண்டு.     
   (96)                           
- இல்லை.(வாழ்த்து, வசை,ஆனந்தம் என்பவை உரையாசிரியரால் குறிக்கப்
பெறுகின்றன.)
 எடுத்துக்காட்டு நூலாசிரியரால்
பாடப்பெறவில்லை.
- பாடப் பெற்றுளது. (9, 11, 13,
15, 18, 20, 22)
மகடூஉ முன்னிலை இல்லை - மகடூஉ முன்னிலை உண்டு.
நூலில் கூறப்பெற்ற பொருளும்,
   தொகையும் கூறப்பெறவில்லை.
- கூறப்பெற்றுள்ளது. (44)
மருட்பாவுக்கு இலக்கணம்
   கூறப்பெறவில்லை
- கூறப்பெற்றுள்ளது. (35)
ஒரு செய்யுளில் பல தொடையும்
   பல அடியும் வரின் அவற்றை
   வழங்கும் வகை கூறப்
   பெற்றுள்ளது. (53)
- கூறப்பெறவில்லை.
கழிநெடிலடி ‘அறுசீர்
   முதலாஐயிரண்டீறா’
   வருவன என்னும் (25)
- (ஐஞ்சீரின்) மிக்க பாதம்
அகவற்பாவின்                   
   ஈற்றுக்கு விதியுண்டு (69)
  கழிநெடில் என்னும், (12)
/ விதியில்லை.
ஒன்றினுக்கொன்றுசுருங்கும்         
   உறுப்பினது அம்போதரங்கம்        
   என்னும் (83)
- ‘‘நீர்த்திரைபோல், மரபொன்று நேரடி, முச்சீர், குறள் நடுவே மடுப்பின்’’ அம்போதரங்கம் என்னும். (30)
காசு பிறப்பு என்னும் வெண்பா
   வாய்பாடுகள் சுட்டப்பெற        
   வில்லை.
- சுட்டப் பெற்றுள.(25)