xLiv
சாகரரே அவ்விலக்கணத்திற்கு இலக்கியமாய்ப் 1 பாடி வைத்துள்ளார்.
ஆதலால், அவருக்கு முன்னிருந்தவரோ உடனிருந்தவரோ இயற்றியதாதல்
வேண்டும். அவ்வாறாக அப்பாடலை உரையாசிரியர் இயற்றி வைத்தார
என்பது பொருந்தவில்லை அல்லவா!
அமிதசாகரர் காரிகையில் 2 உதாரண முதனினைப்புக்களாக 7 பாடல்கள்
இயற்றியுள்ளார். அப்பாடல்களில் 43 பாடல்களின் முதற்குறிப்புகள் உள்ளன.
அவர் காட்டியுள்ள முதற்குறிப்புடைய பாடல்கள் அவர் காலந்தொட்டோ,
அவர்க்கு முன்தொட்டோ வழக்கில் இருந்தவை என்பதில் ஐயமில்லை.
அன்றியும் அவர்க்கு முன்னே விளங்கிய இலக்கண ஆசிரியர்களுள் சிலரும்
உதாரண முதனினைப்புக்களைக் காட்டிச் சென்றுள்ளனர் என்பதும்
அறியத்தக்கதாம்.
‘‘காரிகை, மயேச்சுரர் யாப்பேபோல உதாரணம் எடுத்தோதுவது’’
என்றும் (காரிகை.1. உரை) ‘‘இவ்வாறு பிறரும் இலக்கியங்களை முதலடுக்கிச்
சொன்னாரும் உளரெனக் கொள்க என்னை?
|
என்றார் காக்கை பாடினியார்’ (9) என்றும், யாப்பருங்கலக்காரிகை கூறுவதும்,
‘‘ஓங்கெழில் முதலாக் குன்று கூதிர்...... செந்துறை’’ என்னும் இதனுள்,
‘ஓங்கெழில்’ என்புழி, ‘ஓங்கெழில் அகல்கதிர் பிதிர்துணி மணிவிழ முந்நீர்,
விசும்பொடு பொருதலற’ என்னும் பாட்டும், ‘குன்று’ என்புழி ‘குன்று
குடையாக் குளிர்மழை
1. காரிகையில் அமிதசாகரரால் பாடப்பெற்ற 7 பாடல்களும் 22 ஆம்
காரிகையுடன் அமைகின்றன. அதற்கு மேல் வரும் உதாரண முதனினைப்புப்
பாடல்கள் 11 உம் உரைச்சூத்திரங்கள் *அவை உரையாசிரியரால் யாக்கப்
பெற்றவை. நூலாசிரியர் முதற்கண் நூலையியற்றி உதாரண
முதனினைப்புக்களைப் பின்னே சேர்த்திருக்க வேண்டும். இயற்கைப்
பிரிவாலோ யாதானுமோர் காரணத்தாலோ ஆசிரியரால் நிறைவு செய்யப்
பெறாமல் உரையாசிரியரால் நிறைவு செய்யப் பெற்றிருக்க வேண்டும்!
|