முகவுரை

vii

 

குப் போலும். அவிநயர் யாப்புக்கு அங்கமாய் அமைந்த நாலடி நாற்பது என்னும்
நூலைக் குணசாகரர்.

‘குறினெடி லாய்தம்............என்பது நாலடி நாற்பது என்னும் புறனடை’ என்கிறார்.

      சூத்திர ரூபமாக உள்ள நூலுக்குச் சுலோக ரூபமாக விளக்கம் கூறும் நூலை
வடமொழியாளர் காரிகை என்பர். அம்மரபை யொட்டி இந்நூலும் யாப்பருங்கலக்
காரிகை எனப்பட்டது போலும். தமிழில் காரிகை என்ற சொல்லுக்குக் கட்டளைக்
கலித்துறை என்ற பொருளும் உண்டு. கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைந்ததனால்
இந்நூலைக் காரிகை என்றார் என்று கொள்ளல் ஏற்புடைத்து. அந்த யாப்பில் அமைந்த
வீரசோழியமும் வீரசோழியக் காரிகை எனப்படும். 1/2

இலக்கணச் செய்திகளைக் கூறும் கட்டளைக் கலித்துறைகளே காரிகை
எனப்படுதல் அல்லாமல் கோவை, அந்தாதி. நான்மணிமாலை முதலியவற்றிலுள்ள
கலித்துறைகள் காரிகை எனப்படும் வழக்கம் யாண்டும் காணப்படவில்லை.

ஆதியில் இலக்கண நூல்கள் நூற்பாவாலும் வெண்பாக்களாலும் இயற்றப்பட்டன.
கட்டளைக் கலித்துறையால் இயற்றப்படும் வழக்கம் இடையிற் றோன்றியது. வீரசோழியம்,
களவியற் காரிகை, நவநீதப் பாட்டியல் முதலியன யாப்பருங்கலக் காரிகை போன்று
காரிகை யாப்பில் அமைந்தவை. யாப்பருங் கலத்து உரையுள் யாப்பிலக்கணச்
செய்திகளைக் கூறும் கட்டளைக் கலித்துறைகள் சில காணப்படுகின்றன.
அத்தகையவற்றுள் ‘மாவாழ் புலிவாழ்’ (பக். 84), ‘தூங்கேந் தடுக்கல்’ (பக். 193) என்பன
இந்நூலில் வந்துள்ளன; இவற்றைச் செய்தவர் இன்னவர் என்று திட்டமாகக் கூற
இயலவில்லை. கிரந்தங்களின் கணக்கை எடுத்துக் கூறுவது வடமொழி மரபை யொட்டி
யெழுந்த வழக்க

* யா. வி. பக். 32.

      1/2 ‘தடமார் தருபொழிற் பொன்பற்றி காவலன் றான்மொழிந்த படிவீர சோழியக்
காரிகை நூற்றெண் பஃதொடொன்றின் திடமார் பொழிப்புரை யைப்பெருந் தேவன்
செகம்பழிச்சக் கடனாக வேமொழிந் தான்றமிழ் காதலிற் கற்பவர்க்கே.’