viii

யாப்பருங்கலக் காரிகை

 

மாகும். * இந்தக் கணக்கெடுப்பதற்கு எழுத் தெண்ணித் தொடுக் கப்படும் கட்டளைக்
கலித்துறைகள் வசதியாக உள்ளன. நூல்களில் இடைச் செருகல் நேரா வண்ணம்
ஆசிரியர்கள் சூத்திரங்களின் கணக்கைக் கூறுவதும், நூல்களை அந்தாதித் தொடையில்
அமைப் பதும், இயல்களின் ஈற்றில் முதனினைப்புச் சூத்திரங்களைச் சேர்ப் பதும்
வழக்கம்.

காரிகை யாப்பில் அமைந்த நூல்கள் பலவாயினும் தமிழர் யாப்பருங்கலக்
காரிகை ஒன்றனையே காரிகை என்ற பொதுப் பெயரால் வழங்குவர். இந்நூலின்
சிறப்புக்கு இதுவும் ஒரு சான்று.
 

‘பாவிய லாருநற் காரிகை யோதியின் பாலமர்ந்தும்
மேவிய லாகுநன் னூலிடை யாயா விதமென்னவே;

(சிராமலைக். 9)

‘காடுஞ் செடியுமென் னோதமிழ்க் காரிகை கற்கின்றதே’

(படிக். தனிப்.)

............. எமர்பாலிப் புலவரெலாம்
நன்னூ லிடையெழிற் காரிகை கேட்க நணுகினரே;

(கோடீச். 241)

‘கந்தமிகுஞ் சந்தமல யந்தனி
லிருந்து வந்தாய் தென்றலே - தமிழ்க்
காரிகையின் சீர்மையுறு நேர்மையறி
யாததென்னே தென்றலே;

(சரபேந்திர.)

இங்ஙனம் பல புலவர்கள் யாப்பருங்கலக் காரிகையின் சிறப்பைத் தம் நூல்களின்
தொனியாக அமைத்துப் பாராட்டியுள்ளார்கள்.

      காரிகை யமைப்பை யொட்டிப் பிற்காலத்தார்கள் பாக்களுக்கும்
பாவினங்களுக்கும் உதாரண இலக்கியங்களாக விளங்கும் சிதம்பரச் செய்யுட் கோவை,
பாப் பாவினம், திருவலங்கற்

* காரிகையின் உரையாசிரியரும் கிரந்தங்களின் கணக்கை வடமொழி வழக்குப்
பற்றிக் கூறுகின்றார் (பக். 3.)