றிரட்டு முதலிய நூல்களை எழுதியிருப்பதும் இந்நூற் பெருமையையே
விளக்கும்.
இந்நூல் உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் என மூன்று பிரிவு களுடையது.
செய்யுளின் உறுப்புக்களாகிய
எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்னும்
ஆறனையும் கூறுவது உறுப்பியல். தற் சிறப்புப்
பாயிரமும் அவையடக்கமும்
உறுப்பியலுள் அடங்கும்.* ஐந்துவகைப் பாக்களைப் பற்றியும் விவரிப்பது
செய்யுளியல்.
உறுப் பியலிலும் செய்யுளியலிலும் கூறப்படாத அவற்றுக்கினமான செய்திகள்
ஒழிபியலிற்
கூறப்படுகின்றன. அமிர்தசாகர முனிவர் இந்நூலிற் கூறியுள்ள காரிகைகளின் தொகை
44-என்பது முதற் காரிகை உரையிற் குணசாகரர் உரைப்பதனாலும், ஒவ்வோர் இயலின்
முடிவில்
காணப்படும் காரிகைகளின் முதனினைப்புச் சூத்திரங்களாலும்.
|
|
‘இருபது பதினைந் தொன்பது காரிகை
உறுப்பியல் செய்யு ளொழிபிய லோத்தே’
|
என்று சில சுவடிகளிற் காணப்படும் குறிப்பினாலும் தெரிகிறது. நூலாசிரியர் கூறாத
சில
காரிகைகளும் இந்நூலில் காணப்படுகின்றன. அவற்றிற் பெரும்பாலன உரையாசிரியர்
செய்த உரைச் சூத்திரக் காரிகைகளாம். இவை எல்லாம் உதாரண இலக்கிய
முதனினைப்புக்களைக்
கூறுவன.
|
பாயிரமும் அவையடக்கமும் நீங்கலாக நூலாசிரியர் செய்த காரிகை 41. இவற்றுள்
9, 11, 13, 15, 18, 20, 22-ஆம் காரிகைகள் உதாரண விலக்கிய முதற்
குறிப்புக்
காரிகைகள். எஞ்சிய 34-ம் இலக்கணச் சூத்திரங்களாகிய காரிகைகள்.
அமிர்த சாகரர்
இந்த 34-காரிகைகளையும் இயற்றிய பின்னர் உதாரண முதனினைப்புக்
காரிகைகளை
முறையாக ஒன்றன்பின் ஒன்றாக எழுதிச்
|
|
* அச்சுப் புத்தகங்களில் எல்லாம் பாயிரமும் அவையடக்கமும் உறுப்பியலுக்குப்
புறம்பாகக் கொள்ளப்பட்டுள்ளன. ‘இவ்வோத்தினுள் இத்தலைக் காரிகை
என்னுதலின்றோ
வெனின், சிறப்புப் பாயிரம் உணர்த்துதல் நுதலிற்று (பக். 5)
என்பதனாலும்,
‘கந்தமுந் தேனார்.....மோனையு மாமுறுப்பே’ (பக். 61) என்பதனாலும்
இவை
உறுப்பியலுள் அடங்குமென்ப தெளிவாகும்.
|