எழுதியிருப்பின், நன்னூலுக்கு மயிலைநாதருரையென
ஒன்றுண்டென்பதாவது
தெரிந்திருக்கும்; ஆயினும், ‘நன்னூலுக்குச் சைனருரையென்று ஒன்றுண்டு;
அது பயனற்றது’
என்ற ஒரு செய்தி மட்டும் கன்னபரம்பரையில் வழங்கிவந்தது; இவ்வுரை
ஏட்டுப்
பிரதிகளுள் மிகப்பழையவான சிலவற்றின் தலைப்பில், ‘மயிலைநாதருரை’ என்பது
காணப்பட்டது; அங்ஙனம் காணப்படாதிருப்பின், இக்காலத்தில் இஃது இன்னாருடைய
உரையென்று தெரிந்துகொள்ளுதற்கே இடமிராது.
சிவகங்கையைச் சார்ந்த மிதிலைப்பட்டி யென்னும் ஊரில் இருந்த ஸ்ரீ
அழகியசிற்றம்பலக்
கவிராயரவர்கள் வீட்டில் 1886-ஆம் வருஷத்தில் முதன்முறை
இவ்வுரையைப் பெற்றுப்
படித்துப் பார்த்தபொழுது, ‘சனகை’ என்பதற்கு, ’சனநாதபுரம்’
(பக்கம், 16) என்று
பொருளெழுதியிருந்ததையும், ‘‘முன்னோர் மொழிபொருளே’’ (பக். 4)
என்பது தனிச்சூத்திரமாகக்
காட்டப்படாமல் மேற்கோளாகக் காட்டப்பெற்றிருந்ததையும்,
‘‘தோன்றா தோற்றி’’
(பக். 14) என்பது முதலிய இரண்டு சூத்திரங்களும், பனம்பாரமென்று
தெரிவித்திருந்ததையும்,
யாப்பருங்கலவிருத்தியுரை, காரிகையுரைகளில் விளங்காமற்கிடந்த
‘‘ஓங்கெழின் முதலாக்,
குன்று கூதிர்’’ (பக். 124) என்பதை முதனினைப்பாகக் காட்டி அதிற்
குறிப்பிட்ட
செய்யுட்களை முறையாகப் பின்னர்த் தெரிவித்திருந்ததையும்,
‘‘எப்பொருளெச்சொலின்’’ (387) என்னுஞ் சூத்திரவுரையில் மரபுப்பெயர்கள் பலவற்றை
மிகச் செவ்வையாக விளங்கச் செய்திருந்ததையும், ‘‘விதந்த மொழியினம் வேறுஞ்செப்பும்’’
(பக். 219) என்பது பரிமாணமென்றிருந்ததையும், ‘‘அறிவருளாசை’’ (சூ. 451) என்பதில்
அறிவு முதலிய ஒவ்வொன்றற்கும் மேற்கோள் காட்டி விளக்கியிருந்ததையும், இன்னும்
இவைபோன்ற பிறவற்றையுங்கண்டு வியப்புற்று, இதனை வாங்கிவந்து படித்துப்பார்க்கையில்
இடையிடையே சில சில ஏடுகள் தவறியிருந்தமை எனக்குத் தெரிந்தது; பின்பு முற்றும்
படித்துப்பார்க்கக் கருதிப் பிரதிகளைத் தேடுகையில் திருவாவடுதுறையாதீனம் முதலிய
பழைய இடங்களிலிருந்து ஏட்டுப் பிரதிகள் பல கிடைத்தன. அவற்றால் முதற்
பிரதியிலிருந்த
குறைகளெல்லாம் ஒருவாறு தீர்ந்தன.
என் வேண்டுகோளுக்கு இரங்கித் தங்கள் புத்தகசாலையிலுள்ள ஏட்டுப் பிரதிகளை
வழக்கம்போலவே
அன்புடன் உதவியும், பிரதி தேடும்பொருட்டு அயலிடங்களுக்குச்
செல்லுந்தோறும் அங்கங்கே
எனக்கு வேண்டிய அனுகூலங்களைச் செய்வித்தும், சில
சமயங்களில் |