புறப்பொருள் வெண்பாமாலையையும்,
நாற்கவிராசநம்பி அகப்பொருளையும் மாணவர் சில
நூற்றாண்டுகளாகப் பயின்று வருவாராயினர்.
இந்த ஆறு நூல்களும் சுருங்கச்
சொல்லல், விளங்கவைத்தல் முதலிய பத்தழகுகளோடுங்
கூடி இனிய நடையினை உடையனவாய் இலகுகின்றன. இவற்றை
இப்பொழுது பல்கலைக் கழகத்தார் வித்துவான் தேர்வுக்குப்
பாடமாக அமைத்திருக்கின்றனர். அங்ஙனம் பாடமாக
அமைக்கப்பட்ட இந் நூல்களுள் ஒன்றாகிய நாற்கவிராச
நம்பி அகப்பொருளுக்கு இலக்கியமாகவே தஞ்சைவாணன்
கோவை இயற்றப்பட்டது என்ப. இவ்வகப் பொருள்
இலக்கணத்தின் பழைய உரை இப்பொழுது கிடைக்காமையின்
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்
அதனைப் பரிசோதித்துத் தர வேண்டும் என என்னைக்
கேட்டுக்கொண்டு அதன் பிரதிகள் நான்கினை என்னிடம்
தந்தனர்.
1. அவற்றுள், ஒன்று யாழ்ப்பாணத்துத்
தெல்லிப்பழை, வித்துவான் சிவாநந்தையராற் பதிப்பிக்கப்பெற்றது.
இது, பழைய உரையை உடையது; கி.பி.1907 ஆம் ஆண்டில் பதிப்பிக்கப்பெற்றது.
இதில் இலக்கண இலக்கிய மேற்கோள்கள்
தெளிவின்றிப் பதிப்பிக்கப்பெற்றிருக்கின்றன.
2. மற்றொன்று மதுரைத் தமிழ்ச்சங்கத்தினராற்
பதிப்பிக்கப்பெற்றது. இதுவும் பழைய உரையை
உடையதே, இதில் இலக்கண இலக்கிய மேற்கோள்கள்
சிறிது தெளிவாகப் பதிப்பிக்கப்பெற்றிருக்கின்றன.
அன்றியும், அவற்றின் பெரும்பாலானவற்றின் இடங்களும்
அங்கங்கு நன்கு குறிக்கப்பட்டிருக்கின்றன. இது, திரு.
பாண்டித்துரைத் தேவரவர்களாலும், உ.வே. திருநாராயண
ஐயங்கார் அவர்களாலும் செப்பஞ்செய்யப்பட்டது
எனவும், இதன் மேற்கோட் செய்யுட்களுட் சில மகா
மகோபாத்தியாய டாக்டர்.உ.வே சாமிநாத ஐயர்
அவர்களாற் பார்வையிடப்பெற்றுத் திருத்தப்பெற்றவை
எனவும் இதன் முகவுரையினால் தெரிகின்றது. இது, கி.
பி. 1913ஆம் ஆண்டில் வெளி வந்தது.
3. வேறொன்று யாழ்ப்பாணத்திலுள்ள
வல்வை, இயற்றமிழ்ப் போதகாசிரியராகிய ச. வைத்தியலிங்கப்
பிள்ளை அவர்களால் இயற்றப்பட்ட உரையுடன், க. சபாபதிப்
பிள்ளை அவர்களால் வெளியிடப்பட்டது. இவ்வுரையோடு
கூடிய இந்நூலுக்குப்பின் இதன் இலக்கியமாகிய
தஞ்சைவாணன் கோவை பதிப்பிக்கப்பெற்றிருக்கின்றது. இது 1878இல் பதிப்பிக்கப்பெற்றது.
4. பிறிதொன்று சுன்னாகம், அ.
குமாரசுவாமிப் பிள்ளை அவர்களாலும், திருக்கோணமலை, |