LXI

95 எண்ணி னிறுதியுஞ் சுட்டுமுத லிறுதி
நண்ணிய வுகர முன்னியல் பாகும்.

112 ஒன்பானொடு பத்து நூறு மொன்றி
னொன்றிய விரண்டு மூறுமா யிரமு
மென்று திரிய விறுதிய கெடுவழி
நின்ற னகர நிரலே ணளவா
யிரட்ட வொகரமிசைத் தகர மொற்றும்.

114 ஒருப தொருபஃ தாதியென் றாதி
யொன்பது மவையூர் பிறவு மெய்திற்
கெடுதலுந் திரிதலு மில்லென மொழிப.

118 மூன்ற னுருபினு மாற னுருபினும்
வல்லெழுத்து மிகுத லில்லென மொழிப.

124 தேனென் கிளவி வல்லெழுத் தியையின்
மேனிலை யொத்தலு மீறுபோய் வலிமெலி
மிகுதலு மெலிவரி னிறுதியோ டுறழ்தலு
மிடைவரி னியல்பு மாம்பிற வுயிர்வரி
னொற்றுமிகு தகரமொடு நிற்றலு முரித்தே.

127 மின்பின் பன்கன் றொழிற்பெய ரனைய
வேற்றுமை யாயிற் கன்னவ் வேற்று
வல்லெழுத்துப் பெறுதல் வரைநிலை யின்றே
பொருளொடு புணருங் காலை யான.

128 அழனெ னிறுதி கெடும்வேற் றுமைக்கே.

136 ஏழென் கிளவி யாறிய னிலையு
முகரம் வருத லாவயி னான.

148 உருபினும் பொருண்முடி பொக்குமன் பயின்றே

149 எல்லா வீற்றுஞ் சொல்லுங் காலை
வேற்றுமை யுருபிற் கின்னே சாரியை.