| | ஒன்பான் முதல்நிலை முந்துகிளந் தற்றே முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும் நூறுஎன் கிளவி நகார மெய்கெட ஊஆ ஆகும் இயற்கைத்து என்ப ஆயிடை வருதல் இகார ரகாரம் ஈறுமெய் கெடுத்து மகரம் ஒற்றும். | 463 |
| | | |
| 147 | உயிரும் புள்ளியும் இறுதி யாகிக் குறிப்பினும் பண்பினும் இசையினும் தோன்றி நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியும் உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின் ஐம்பால் அறியும் பண்புதொகு மொழியும் செய்யும் செய்த என்னும் கிளவியின் மெய்யொருங்கு இயலும் தொழில்தொகு மொழியும் தம்மியல் கிளப்பின் தம்முன் தாம்வரூஉம் எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும் அன்னவை எல்லாம் மருவின் பாத்திய புணரியல நிலையிடை உணரத் தோன்றா. | 482 |
| | | |
| 154 | தாம்நாம் என்னும் மகர இறுதியும் யாமென் இறுதியும் அவற்றோ ரன்ன ஆஎய் யாகும் யாமென் இறுதி ஆவயின் யகரமெய் கெடுதல் வேண்டும் ஏனை இரண்டும் நெடுமுதல் குறுகும். | 188 |