இலக்கண விளக்கம்

vi

அலமந்தகாலைத் தம்மிடமுள்ள அந்நூலின் கையெழுத்துப் படியினை விரைவுடன் உதவிய பெருந்தகையாளர் திருவாளர் மு. அருணாசலம் பிள்ளை,M.A. அவர்கள் காலத்தினால் செய்த நன்றிக்கு என்றென்றும் கடப்பாடுடையேன்.

பிரபந்த தீபிகை என்ற நூலைப் படியெடுத்து எனக்கு அனுப்பிய என் இளவல். Dr. பஞ்சாபகேசன், M.A. M.Sc. எண்ணில் வல்லவனாயிருப்பதோடு எழுத்திற்கும் பயன்பட்டுள்ள திறம் நினைந்து பெருமிதமுறுகிறேன்.

வழக்கம்போல இப்பதிப்பிற்குப் பல்லாற்றானும் உதவியுள்ள திரு  வித்துவான் கங்காதரன், M.A. உள்ளிட்ட என் உடன் பிறந்தார் அனைவருக்கும் என் ஆசிகள். இப்பதிப்பிற்குப் பயன்பட்டுள்ள நூல்களையெல்லாம் பதிப்பித்துதவியுள்ள சான்றோர் அனைவருக்கும்
என்நன்றி.

இதனையும் நன்முறையில் அச்சிட்டளித்த குடந்தை ஜெமினி அச்சக உரிமையாளருக்கும், அவ்வச்சகத் தொடர்பான பணிபுரியும் அலுவலர் அனைவருக்கும் என் கனிவான நன்றி.

இப்பதிப்பில் என் அயர்வான் ஏற்பட்டிருக்கக் கூடிய பிழைகளைப் பொறுத்தருளுமாறு தமிழ் கூறு நல்லுலகத்துக்கு என் வேண்டுகோள்.

இடையிடையே அவ்வப்போது ஏற்பட்ட இடையூறுகளையெல்லாம் செகுத்து இந்நூல்முழுமையும் இந்நூலக வாயிலாகப் பதிப்பித்தற்கு எனக்கு வாய்ப்பளித்த ஐயாற்றரசின் அடியிணைகளை வந்தித்து வாழ்த்துகிறேன்.

46, மேலமட விளாகம் } ஐயாறன் கோபாலையன்
      திருவையாறு
      28-5-1974