பதிப்பாசிரியர் முகவுரை
பதினேழாம் நூற்றாண்டில்
வாழ்ந்த இலக்கணப் பெரும்புலவரான
திருவாரூர் வைத்தியநாத தேசிகர் தாமே உரையும் இயற்றி
அமைத்த
‘குட்டித் தொல்காப்பியம்’ எனப்படும் இலக்கண விளக்கம் பொருட்படலப்
பாட்டியலோடு நிறைவுறுகிறது.
இந்நூலின் பாட்டியலை உரையுடன்
இயற்றியவர் வைத்தியநாத தேசிகருடைய இளைய மகனாரான தியாகராச
தேசிகர் என்னும் செய்தி ‘பொன்மலை’ என்று தொடங்கும் பாட்டியல்
பதிகத்தான் (பக்கம்-384)
போதருகிறது.
இந்நூலின் எழுத்துப்படலமும்
சொற்படலமும் பொருட்படலத்தின்
முன்னைய நான்கு இயல்களும் பதிப்பிக்கப்பெற்ற முறையைப் பின்பற்றியே
பதிப்பிக்கப் பெற்றுள்ள பாட்டியலோடு இந்நூல் நிறைவுறுகிறது.
இந்நூலை இம்முறையில்
பதிப்பித்தல் வேண்டும் என்று கூறி
இவ்வாய்ப்பினை எனக்கு நல்கிய தஞ்சை சரசுவதி மகால்
முன்னாள்
கௌரவ காரியதரிசி முதுபெரும் புலவர் திருவாளர் நீ. கந்தசாமி பிள்ளை
அவர்களுக்கும்,
அப்பணி தொடர்ந்து நிகழ்ந்து நன்முறையில் நிறைவேற
ஆவன புரிந்துவரும் இந்நாள் மதிப்பியற் செயலர்
திருவாளர் வித்துவான்
அ. வடிவேலனார் அவர்களுக்கும், துணை நூலகர் திரு. சீராளன்,
B.A.அவர்களுக்கும் பெரிதும் நன்றியறிதலுடையேன்.
இப்பதிப்பிற்குப்
பெரிதும் பயன்பட்டுள்ள பிரபந்த மரபியல் என்னும்
நூலைக்காணும் வாய்ப்பின்றி யான்
|