பாட்டியல் - பிற்சேர்க்கை 2

447



கலம்பக உறுப்புக்கள்
 

ஆர்புயம் தவம்மதங்கு அம்மானை காலம்
குறம்மறம் களிமயக்கு ஊசல் வண்டுஊர்
சித்துஇரங் குதல்சம் பிரதம் தழைபாண்
கைக்கிளை தூதுஇவை கலம்பகக் கூற்றே.  

4

கலம்பக இலக்கணம்
 

வெண்பாக் கலித்துறை வேண்டுஇவற்று ஒன்றால்
வண்ணம் முன்னுற வருமுதல் உறுப்பு
வினவின் ஒருபோகு வெண்பாக் கலித்துறை
அகவல் விருத்த மாயும்வேறு அகவல்
வெண்பாக் கலித்துறை ஆசிரியம் வஞ்சித்துறை
மருட்பா வெண்டுறை வஞ்சி கலியினம்
இவற்றை அந்தாதித்து இயம்பிய கூற்றால்
கலந்து பாடுவது கலம்பகம் என்ப. 

5

கலம்பகச் செய்யுட்டொகை
 

நூறு தேவர் தொண்ணூற் றைந்து
பார்ப்பார் அரசர் தொண்ணூறு அமைச்சர்
எழுபஃது ஐம்பான் வைசியர் ஆறைந்து
சூத்திரர் பெறுவரெனச் சொற்றனர் புலவர்.

6

பன்மணி மாலை
 

அறைந்த கலம்பகத்து அம்மானை ஊசல்
ஒருபோகு என்பன ஒழியச் சிறப்பித்து
அந்தா தித்துநூறு அறைவது பன்மணி
மாலை என்ப மாண்புஉணர்ந் தோரே. 

7

வெண்பா அந்தாதி, கலித்துறை அந்தாதி
 

மன்னிய கலித்துறை வெள்ளை நூறு
அந்தாதித்து அப்பெயர் அந்தாதி ஆகும்.

8