|
வருக்கக் கோவை
|
உயிரும் மொழிமுதல் உயிர்மெயும் வருக்கத்து
அடைவில் வருபொருள் துறையில் கலித்துறை
வழுத்தும் இயல்பது வருக்கக் கோவை. |
|
9 |
|
அகப்பொருட் கோவை
|
தூண்டும் அகப்பொருள் துறைவளர்ந்து அமையக்
கருதிநா னூறு கலித்துறை யாகக்
காதல் அன்புறு காந்தருவ மணத்தில்
கொடிச்சியும் ஊரனும் குலவுநெறி நடப்பது
அகப்பொருட் கோவை ஆம்என மொழிப. |
|
10 |
|
இரட்டைமணி மாலை
|
கருதும் வெண்பாக் கலித்துறை விரவி
இருபது வழுத்துவது இரட்டைமணி மாலை. |
|
11 |
|
இணைமணி மாலை
|
வெண்பாத் தொகைமுதல் பாக்கலித் துறைநன்கு
இணைய இயம்புவது இணைமணி மாலை.
|
|
12 |
|
மும்மணிக்கோவை
|
அகவல் வெண்பாக் கலித்துறை என்பன
முப்பது விரவின் மும்மணிக் கோவை. |
|
13 |
|
ஒலி அந்தாதி
|
|
வகுப்பின் ஈரெண் வண்ணச் செய்யுளுள்
ஓங்கிய முப்பான்
ஒலியந் தாதி. |
|
14 |