முகப்பு
தொடக்கம்
இலக்கண விளக்கம் - பொருளதிகாரம்
மும்மணிமாலை, நான்மணிமாலை
‘வெண்பாக் கலித்துறை அகவற்பா மூன்று
அந்தா தித்து முப்பஃது இயம்பின்
மும்மணி மாலை ; இம் முப்பதின் மேல்வர
ஆசிரியம் பத்தும் அந்தா தித்து
நவில்வது ஆகும்நாள் மணிமா லையே.’
20
அலங்கார பஞ்சகம்
‘ஆதிப்பா கலித்துறை ஆசிரியம் வஞ்சி
மனவிருத் தத்தொடு வண்ணம் இசைய
ஐந்தின் அலங்காரத்து அந்தா தித்துப்
பாடுவது அலங்கார பஞ்சகம் என்ப.’
21
அட்டமங்கலம்
‘விரும்பும் எட்டுமன விருத்தந் தோறும்
தெய்வம் காப்பாய்ச் சிறந்து சுபகரத்து
அந்தாதித்து இயம்பல் அட்டமங் கலமே.’
22
நவமணிமாலை, ஒருபா ஒருபஃது
‘விருத்தம்ஒன்று அந்தாதித்து ஒன்பது வழங்கல்
நவமணி மாலை;ஓர் பாவில்அந் தாதித்து
ஈரைந்தாச் சொல்வது ஒருபா ஒருபதாம்.’
23
பல்சந்தமாலை
‘அகவல் விருத்தம் வகுப்பினால் ஒன்றில்
பத்து முதலா நூறு வரைபல்
சந்தம் மேவர அந்தா தித்துச்
சாற்றுவது பல்சந்த மாலை என்ப.’
24