பாட்டியல் - பிற்சேர்க்கை 2  

451



ஆற்றுப்படை
 

‘விறலியர் பாணர் கூத்தர் பொருநர்என்று

ஓது நால்வருள் ஒருவரை அகவலால்

அங்கொடு தன்மை ஆற்றுப் படுத்துப்

பகர்வது ஆற்றுப் படையென மொழிப.’
 

25

பாதாதிகேசம், கேசாதிபாதம், அங்கமாலை
 

‘பாதாதி கேசம் கேசாதி பாதம்

எண்ணான்கு உறுப்பும் ஏற்கவரு ணித்துக்

கலிவெண் பாவால் கட்டுரை செய்வது

அவ்வப் பெயரின; அங்க வகையை

விளம்பிய ஒழுங்கின் வெளிவிருத் தத்தால்

வழுத்துவது அங்க மாலை ஆமே.’
 

26

மங்கல வள்ளை
 

‘மாசில்குல மகளை வகுப்புவெண் பாவினால்

ஒருபொருள் உரைத்தலாய் ஒன்பது ஒன்பது

ஆகப் பாடின் மங்கல வள்ளை.’
 

27

மெய்க்கீர்த்தி வஞ்சி
 

‘வஞ்சிப் பாவில் கிரீட வேந்தர்

மெய்க்கீர்த்தியை வகுத்து மெய்ம்மையின் உள்ள

கீர்த்தியை உரைப்பது மெய்க்கீர்த்தி வஞ்சி.’
 

28

புகழ்ச்சி மாலை, நாம மாலை
 

‘குணப்பெயர் அடுக்கிக் கொம்புஅனை யார்க்கு

 வஞ்சியின் அகம்மிக மகிழ உரைப்பது
 பெருமகிழ்ச்சி மாலை; இப்படி ஆடவர்க்
 நயந்து பாடுவது நாம மாலை.’

29