கைக்கிளை
|
‘காமம்ஒரு தலையது கைக்கிளை மாலை.’
|
30 |
உலா, இன்ப மடல்
|
‘தேவர் மக்களில் சிறந்தோன் ஒருவனாய்ப்
புரவியும் பாண்டிலும் பொலியப் பவனிவரு
குழமகன் குலம்முத லியஅடை யாளம்
குறிப்பின் கலிவெண் பாவிற் கழறி
அவன்தெரு அணைய ஏழ்பரு வத்துக்
கண்டோர் உவக்கக் கவின்தரு வயதுஏழ்
பேதை; பன்னொன்று பெதும்பை; பன்முன்று
மங்கை; பத்தொன்பான் மடந்தை; ஐயைந்து
அரிவை; முப்பஃது தெரிவை; நாற்பான்
பேரிளம் பெண்எனும் பெண்முத லானோர்
தொழஉலாப் போந்தது உலா;தலை வன்பேர்க்கு
உற்றதொடை எதுகை ஒன்றில்இன் பத்தை
உயர்த்துஒரு தலையா ஓங்கிய காமத்து
இசைப்பது ஆகும் இன்ப மடலே.’ |
31 |
உலா மடல்
|
‘தருணநன் மாதைஓர் தலைவன் கண்டு
உறுப்புநலன் உவந்து உட்குறிப்பு உரைத்தும்
கனவினில் சேர்ந்தும் கரமுற இனையாள்
துணிவன் மடல்எனச் சொல்வது உலாமடல்.’ |
32 |
அநுராகமாலை, தூது
|
‘பாங்கற்குப் புணர்ந்த கனவினால் தனது
இன்னல்வரு ணித்தல் அநுராக மாலை;
இருதிணை யுடன்அமை இயலை உரைத்துத்
தூதுசொல விடுவது தூது; இவை கலிவெண்
பாவினால் விரித்துப் பகருவது மரபே.’
|
333 |