‘படைபுக்கு ஆயிரம் பகடுஅற ஒன்னார்
போரில் எதிர்ந்து பொரும்அர சனுக்குக்
கடவுள் வாழ்த்து, கடைதிறப்பு, பாலை
நிலம், காளி கோட்டம், நிலையிய கழுது,
காளிக்குப் பேய்சொலல், பேய்க்குக் காளிசொலல்,
அதனால் தலைவன் கீர்த்தியை அருளுதல்,
அவன்செலல், புறப்பொருள் தோன்றஆர்ப் பரித்துப்
போராடல், பொருகளம் விரும்பல் இவற்றை
நாற்சீர் ஆதியின் நண்ணும்ஈ ரடியின்
ஏறாது பரணி இயம்புதல் நெறியே.’
|