நாடுநகர் பருவம் நீடும் இருசுடர்த்
தோற்றம்என்று இனைய தொகுதியில் புனைந்துபெண்
வேட்டல்முடி கவித்தல் பூம்பொழில் நுகர்தல்
புனலாடல் கள்ளுண்டல் மகிழ்தல் ஊடல்
புதல்வரைப் பெறுதல் கலவியில் களித்தல்
இன்ன செய்கையின் நன்னடைத்து ஆகி
மந்திரம் தூது செலல்போர் வென்றி
சந்தியில் தொடர்ந்து சருக்கம் இலம்பகம்
பரிச்சே தம்எனும் பான்மையின் விளங்கி
நெருங்கிய சுவையும் பாவமும் விரும்பக்
கற்றவர் புனையும் பெற்றியது ஆமே.’
|