‘முல்லை குறிஞ்சி மூசு மருதம்
நெய்தல் என்ன எய்தும்நா னிலமும்
திகழும் வெண்மையும் செம்மையும் பொன்மையும்
கருமையும் ஆகக் கருதும்நால் நிறமும்
அறுமீன் கொடுநுகம் அநுடம் அவிட்டம்
என்னும் நான்கும்என்று இன்னவை முறையே
வெண்பா முதலா மேவும்நாற் பாவும்
கொள்ளும் மரபாம் குறிக்குங் காலே.’
|