கவிஞன் இலக்கணம்
|
‘பாடுமுறை செய்யுட்
பாவின் விகற்பினைத்
தெளிந்துநூற்
புலமையுட் செறிந்த அறிவின்
பாட வல்லபா வலன்தரு
நலம்குணம்
தெய்வம் கொள்கை
மேம்பாட்டு ஒழுக்கம்
செல்வம் மேன்மை
உளனாய், உட்புறம்
அழகும் சமயநூல் பிறநூல்
அறிந்து
உவக்கும்பிற பாடைநூல்
இலக்கண நூலிவை
தேர்ந்து விரைவில்
பாடும்நா வினனாய்,
உறுகண் உறுப்பில்
குறைவுநோய் இலனாய்,
நாற்பொருள் உணர்ந்து
கலைக்கு ஞானியாய்ச்
செப்பும் நான்கும்
புலமைத் திறனே.’
|
50 |
கவி
|
‘அவருள்,
ஆசு முதற்பா அவனியில்
மெச்சப்
பாஇனம் கொண்டும்
பாடுவோன் கவியே.’
|
51 |
கமகன்
|
‘நாட்டிய அரும்பொருள் செம்பொருள் நடையாக்
காட்டி யேவிவ கரிப்போன்
கமகன்.’
|
52 |
வாதி
|
‘ஏதுவும் மேற்கோளும்
எடுத்துக் காட்டிய
தன்மையின் நன்கே
தன்கோள் நிறீஇ
வா தில் பிறர்கோள்
மறுப்பவன் வாதி.’
|
53 |
வாக்கி
|
‘அறம்முதல் நாற்பொருள்
பயனும்அத் திறத்தில்
கேட்கவே திறம்படப்
பாடுவோன் வாக்கிஎன்று
இசைக்கும்
மன்னால் புலமையோன் இயல்பே.’
|
54 |