‘செய்யுள் கொளும்இடம்
சித்திரத் துகிலின்
ஆத்து விதானித்து
அலங்கல் நாற்றித்
தோரணம் கதலி துவசம்
உயர்த்திப்
பூரண கும்பம்
பொன்முளைப் பாலிகை
வெண்பொரி தீபம்
மிளிர்தரச் சமைத்துப்
பல்இயம் இயம்பப்
பாவையர் ஆடப்
பாணரும் மகளிரும்
பல்லாண்டு இசைதர
அந்தணர் நசைதர
வாழ்த்த ஒண்பூ
மலராடை புனைந்துஒரு
தவிசின் மேவி
எதிராய் வேறும்ஓர்
தவிசில் இருத்தி
மங்கலப் பாடல்
ஏற்றுஉளம் மகிழப்
பொன்புவி வத்திரம்
பூண்பன பிறவும்
உதவி ஏழடி புலவ
னுடன்போய்
மீள்வது கடன்என
விளம்பினர் மேலோர்.’
|