‘கொள்ளான் பனுவலைக் கொள்வோன் தனக்குப்
பெயர்முத லவற்றைப்
பெயர்த்தும் அழித்தும்
மீட்டுஒரு பேரின்
விரைந்துஅதில் சேர்த்தி
மொழிந்த வழுக்களான்
முன்மொழி எடுத்து
வைத்துஅவன் இயற்பெயர்
தோறும் மாளச்
செய்யுள் பெயர்த்துச்
செந்நூல் சுற்றி
அதன்மிசைச் செம்மலர்
அணிவுறச் சாற்றிக்
கவர்தெருப்
புறத்தும் காளிகோட் டத்தினும்
பாழ்மனை அகத்தும்
பழுத்த இரும்பினால்
ஆங்கவன் தனைநினைந்து
அகம்நொந்து கடினே
ஈராறு திங்களின்
இறுதி யாவன்;
இங்ஙனம் இயற்றாது
இதயம் நொந்துகொண்டு
இருக்கினும்
கிளையொடும் இறுதி யாவன்என்று
ஓதியது அகத்தியர்
உண்மைநூல் நெறியே.’
|