‘மதிநாக நதிவேணி யன்சுதனை அஞ்ஞான
மத அந்தகாரதீப
மயமான போதம்அருள் தேசிகக் கடவுள்இரு
மலரடி வழுத்தல் செய்வாம்
பதினாறை ஆறில்பெருக்கு பிரபந்தாதி
பலவகை எடுத்துரைக்கின்
பாரில் வருணம்நாலின் அந்தகன் செவிடு ஊமை
பாஷண்டி அலி உலோபன்
அதிபாலன் அங்கஈனன் முதியரைத் தள்ளி
அருள் உதாரன் குலீனன்
அர்த்தமுளன் விற்பன சலட்சணன் புலவர்தமிழ்
அருமைகண்டு ஈகுவோர்பால்
இதமான பத்துப் பொருத்தமும் இலக்கண
இலக்கியப் பொருள் சிறக்க
இசைபெற உரைப்பென் என் சிற்றறிவினால் சொல்லும்
இன்சொல்
தழைக்க என்றே.’
|