| 
‘ஆசுமதுரம் சித்ரம் வித்தார நாற்கவியின் 
              ஆனவெண்பா முதலின் இனம் 
  
          ஆகிய வினைப்பதம் ஒலிப்பதம் பெயர்வினை 
              ஆரும் உயர்திணை அஃறிணை 
  
     மாசிலா ஒருமைபன்மை தன்மை முன்னிலை 
              மாட்சி அளபெடை காலமும் 
           
          வளம்உறும் உயிர்ச்சந்தி மெய்ச்சந்தி பகுபதம் 
              வரும் ஆரியம் தேசிகம் 
  
     தேசுமிகும் வல்இடை மெல்லினம் குறில்நெடில் 
              சீரான உயிர்மெய்களும் 
  
          செப்பு குற்றியலுகரம் ஆதிய குறுக்கம் 
              சிறந்திடும் தலைவி தலைவன் 
  
     பேசரிய நவரதம் விருத்தி பாகம் நீதி 
              பின்பு பொருளணி அக்கரம் 
  
          பிறப்பு வினைமுற்றுப்பெயர் முற்றொடும் அறிந்துவகை 
              பேசுவர்கள் புலவோர்களே.’ 
 |