தாரகை இரட்டைமணி பன்மணி புகழ்ச்சி பல
சந்தம் மெய்க்கீர்த்தி காப்பு
தண்டகம் தும்பை இணைமணி வேனில் மும்மணி வ
சந்தம் உற்பவம் நான்மணி
நவமணி வீர வெட்சி யுடனே வாகை
ஊழிஞை மணி நொச்சி காஞ்சி
உயர்வருக்கம் பெருமகிழ்ச்சி நூறொடு பதிற்று
ஒலியல் அந்தாதி தூதோடு
உலவு அலங்கார பஞ்சகமும் வாயுறைவாழ்த்து
உலா வளமடல் கைக்கிளை
ஊர் பெயர் கொள் நேரிசையோடு இன்னிசை குறத்தியொடு
உழத்திப் பாட்டுக் குழமகன்
பாதாதிகேச வரலாற்றுச் செருக்களம்
படு வஞ்சி பெருமங்கலம்
|