பாட்டியல் - பிற்சேர்க்கை 3  

465


சாதகம், பிள்ளைக்கவி

 

     ‘ஆதியின் இலக்கணக் கடல்எனும் பலநூல்கள்

              ஆராய்ந்து உணர்ந்த அதனை

         

          ஆசிரி யம்எனும் விருத்தத்தி னாற்கூறுதும்;

              அலகுறு சகாப்தம் ஆண்டு

 

     தேதிஉடு ஓரை திங்களும் சாதகன்

              திசை சித்ரம் அலங்காரமும்

 

          திரமான கிரகநிலை அறிந்துசொல் சாதகம்;1

             செப்பு பிள்ளைக்கவிக்கு2

 

     மாதம்இரு திங்களில் காப்பு, ஐந்து செங்கீரை,

              மாதம் ஏழில் தாலமாம்,

 

          வரைநவம் சப்பாணி, முத்தமோ பன்னொன்று,

              வாரானை சம்வற்சரம்,

 

     ஓது ஒன்றரை வருடம் இந்துஇரண்டினில் சிற்றில்,

              ஒலிபறை முழக்கல் மூன்றில்,

 

          ஊர்இரதம் நாலில் ஆண்பால்; கழங்கு அம்மானை

              ஊசல் பெண்பாலதாமே.’   

5

 

பரணி

 

     ‘வெம்போர் முகத்துஆயிரம் யானையைக் கொன்ற

            வீரனைத் தலைவ னாக

         

          வேண்டிப் புகழ்ந்துபின் கடவுளரை வாழ்த்தலும்

              மேல் இளைஞர் கடைதிறப்பு

 

     வண்பாலையில் காளிகோயிலில் காளிதான்

              வன்பேய்களோடு ஆடியும்

         

          மற்றும்ஒரு கூளிப்பேய் சொல்கருது தலைவனான்

             மாறாத கீர்த்தி பொங்கப