| 
5. அரசன் விருத்தம் :
    பத்துக் கலித்துறையும் 
முப்பது விருத்தமும் கலித்தாழிசையுமாக மலைகடல் நாட்டு வருணனையும், நில வருணனையும், வாள்மங்கலமும்,
 தோள்மங்கலமும் பாடி முடிப்பது. இது முடிபுனைந்த வேந்தற்கு ஆம்.
 
 
6. அலங்கார பஞ்சகம் :     வெண்பா, கலித்துறை, 
அகவல், ஆசிரிய விருத்தம், சந்த விருத்தம்இவ்வகையே மாறி மாறி நூறு செய்யுள் அந்தாதித்துப் 
பாடுவது.
 
 
7.ஆற்றுப்படை :       அகவற்பாவால், விறலி, 
பாணர், கூத்தர், பொருநர் இந்நால்வருள்ஒருவர் பரிசிற்குப் போவாரைப் பரிசுபெற்று வருவார் 
ஆற்றிடைக்கண்டு
 தலைவன் கீர்த்தியும் கொடையும் கொற்றமும் சொல்வது.
 
8.   இணைமணிமாலை :  வெண்பாவும் அகவலும் வெண்பாவும் கலித்துறையுமாக 
இரண்டிரண்டாகஇணைத்து, வெண்பா அகவல் இணைமணி மாலை, வெண்பாக் கலித்துறை
 இணைமணிமாலை என நூறு 
நூறு அந்தாதித்தொடை நான்காலும் பாடுவது.
 
9.   இயன்மொழி வாழ்த்து : இக்குடிப் பிறந்தோர்க்கு 
எல்லாம் இக்குணம் இயல்பு என்றும், அவற்றைநீயும் இயல்பாக உடையை என்றும் இன்னோர்போல 
நீயும் இயல்பாக ஈ
 என்றும் உயர்ந்தோர் ஒருவனை வாழ்த்துவதாகக் கூறுவது.
 
 |