490

இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


47.  தாரகை மாலை :

அருந்ததிக் கற்பின் மகளிர்க்கு உள்ள இயற்கைக் குணங்களை
வகுப்பால் கூறுவது. தூசிப்படையின் அணியைப் புகழ்ந்த வகுப்பு என்பாரும்
உளர்.

48.  தானை மாலை : 

அகவலோசையில் பிறழாது ஆசிரியப்பாவான் முன்னர் எடுத்துச்
செல்லும் கொடிப்படையைக் கூறுவது.

49.  தும்பை மாலை :

மாற்றாரோடு தும்பைப்பூ மாலை சூடிப் பொருவதைக் கூறுவது

50.  துயிலெடை நிலை :

தன் வலியால் பாசறைக்கண் ஒரு மனக்கவற்சியின்றித் துயின்ற
அரசற்கு நல்ல புகழினைக் கொடுத்தலைக் கருதிய சூதர் துயிலெடுப்புதலாகப்
பாடுவது.

51.  தூது :

ஆண்பாலாரும் பெண்பாலாரும் அவரவர் காதற்பாணன் முதலிய
உயர்திணையோடும் கிள்ளை முதலிய அஃறிணையோடும் சொல்லித்
‘தூதுபோய் வா’ எனக் கலிவெண்பாவால் கூறுவது. 

52.  தொகைநிலைச் செய்யுள் :

நெடிலடிச் செய்யுளால் தொகுத்தது நெடுந்தொகையும், குறளடிச்
செய்யுளால் தொகுத்தது குறுந்தொகையும் கலிப்பாவால்
தொகுத்ததுகலித்தொகையும் போல்வன.

53.  நயனப்பத்து :

கண்ணினைப் பத்துச் செய்யுளால் கூறுவது.