பாட்டியல் - பிற்சேர்க்கை4     

489


41.  செருக்களவஞ்சி :

போர்க்களத்திலே அட்ட மனிதர் உடலையும், யானை குதிரை
 உடலையும் பேயும் பிசாசும் கழுகும் பருந்தும் காகமும் தின்று களித்து
ஆரவாரமாய்இருக்க, பூதமும் பேயும் பாடி ஆட இங்ஙனம் இருந்த
சிறப்புப் பாடுவது. இதையே பறந்தலைச் சிறப்புப் பாட்டும் என்ப.

42.  செவியறிவுறூஉ :

பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடன் என
அவையடக்கியற் பொருளுற வெண்பா முதலும் ஆசிரியம்

43.  தசாங்கத்தயல் :

அரசன் தசாங்கத்தினை ஆசிரிய விருத்தம் பத்தினால் பாடுவது.

44.  தசாங்கப் பத்து :

நேரிசை வெண்பாவால் அரசன் படைத்த தசாங்கத்தினைப் பத்துச்
 செய்யுளால் கூறுவது.

45.  தண்டகமாலை :

வெண்பாவால் முந்நூறு செய்யுள் கூறுவது. இது வெண் புகழ்ச்சி
மாலை
எனவும் படும்.

46.  தாண்டகம் :

இருபத்தேழு எழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடியினவாய் எழுத்தும்
குருவும் லகுவும் ஒத்து வந்தன அளவியல் தாண்டகம் எனவும்,
எழுத்து ஒவ்வாதும் எழுத்தலகு ஒவ்வாதும் வந்தன அளவழித் தாண்டகம்எனவும் வரும்.