492

இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


62.  பயோதரப் பத்து :

முலையினைப் பத்துச் செய்யுளால் கூறுவது.

63.  பரணி :

போர் முகத்து ஆயிரம் களிற்றியானையைக் கொன்ற வீரனைத்
தலைவனாகக் கொண்டு கடவுள் வாழ்த்தும், கடை திறப்பும், பாலை
நிலனும்,காளிகோயிலும் பேய்களோடு காளியும், காளியோடு பேய்களும்
சொல்லத் தான் சொல்லக்கருதிய தலைவன் சீர்த்தி விளங்கலும்,
அவன்வழியாகப் புறப்பொருள் தோன்ற வெம்போர் வழங்க விரும்பலும்
என்றிவையெல்லாம் இருசீரடி முச்சீரடி ஒழித்து ஒழிந்தவற்றடியாக
ஈரடிப்பஃறாழிசையால் பாடுவது.

64.  பல்சந்தமாலை :

பப்பத்துச் செய்யுள் ஒவ்வோர் சந்தமாக நூறு செய்யுள் கூறுவது.

65.  பவனிக்காதல் :

உலாக் காட்சியால் எய்திய காமம் மிக்கால் அதைப் பிறரோடும
 உரைத்து வருந்துவது.

66.  பன்மணிமாலை :

     கலம்பகத்துள் வரும் ஒருபோகும் அம்மானையும் ஊசலும் இன்றி
ஏனைய உறுப்புக்கள் எல்லாம் அமைய அவ்வாறு கூறுவது. இதையே
கலம்பக மாலை என்ப. 

67.  பாதாதிகேசம் :

கலி வெண்பாவால் அடி முதல் முடி அளவும் கூறுவது.