78. மங்கலவள்ளை :
உயர்குலத்து உதித்த
மடவரலை வெண்பா ஒன்பதாலும் வகுப்பு
ஒன்பதாலும் பாடுவது.
79. மணிமாலை :
எப்பொருள்மேலும்
வெண்பா இருபதும் கலித்துறை நாற்பதும் விரவி
வருவது.
80. முதுகாஞ்சி :
இளமை கழிந்து அறிவு
மிக்கோர் இளமை கழியாத அறிவில்
மாக்கட்குக் கூறுவதாம்.
81. மும்மணிக்கோவை :
ஆசிரியப்பாவும்,
வெண்பாவும், நேரசையும் நிரையசையும் கொண்டு
எழுத்தெண்ணிப் பாடப்படும் கலித்துறையும் முறையே தொகை
முப்பது
பெறஅடுக்கிய அந்தாதித் தொடையால் பாடுவது
82. மும்மணிமாலை :
வெண்பாவும் கலித்துறையும்
அகவலும் அந்தாதித் தொடையால்
முப்பது பாடுவது.
83. மெய்க்கீர்த்திமாலை :
சொற்சீரடி என்னும்
கட்டுரைச் செய்யுளால் குலமுறையில் செய்த
கீர்த்தியைக் கூறுவது.
84. வசந்தமாலை :
தென்றலை வருணித்துப்
பாடுவது.
|