என்றும் தொகுத்தும் விரித்தும் கையாளப் பட்டுள்ளதைக் காணலாம்.
இலக்கணக்
கொத்தின் செல்வாக்கிற்கு நூல் அடிப்படையே
காரணமாக இருக்கலாம்போல தோன்றுகின்றது. இலக்கண விளக்கம்
சொல்லைத் தனிமொழி, தொடர் மொழி என்று பொதுவாகப் பிரிக்கலாம்
என்று குறிப்பிட்டுவிட்டு பெயரியலிலோ, வினையியலிலோ அப்பாகுபாட்டின்
அடிப்படையில் நினைக்கத் தவறிவிட்டது. அதே அடிப்படையில் அந்த
இரண்டு இயலிலும் இலக்கணம் கூறுவது சிறந்தது என்ற கருத்து நிலைபெற்ற
போது இலக்கணக் கொத்து அம் முறையைப் பின்பற்றியிருப்பதைக் கண்டே
சாமிகவிராயர் இலக்கணக் கொத்தில் ஈடுபாடு கொண்டிருக்கலாமோ என்று
நினைக்கத் தோன்றுகிறது.
5. 1. 7. பிரயோக விவேகமும் சுவாமிநாதமும்
நன்னூலார் வடமொழியை நோக்கத் தமிழில் காணப்படும் சிறப்புப்
பண்புகளைக் கூறுமிடத்து எழுத்தியல் பண்புகளை மட்டுமே கூறினார்.
|