என்று வட மொழியை நோக்க தமிழின் சிறப்பாக உள்ள எல்லாப் பண்புகளையும் தொகுத்துக் கூறிவிட்டார்.
நன்னூலில் கூறாது விட்ட செய்திகள் பிற நூல்களில் வந்துள்ளபோது இவர் இரண்டையும் இணைப்பதன் மூலம் நன்னூலில் உள்ள குறையைப் போக்க முற்படுகின்றார் என்று
வேண்டுமானாலும் சொல்லலாம்.
5. 1. 8. முத்துவீரியமும் சுவாமிநாதமும்
முத்துவீரியத்தின் செல்வாக்கு மிகக் குறைவாகவே காணப்படுகின்றது.
பிற இலக்கண ஆசிரியர் கூறாத சில செய்திகளாக முத்து வீரியத்தில்
காணப்படுபவை சுவாமி நாதத்திலும் வந்துள்ளதால் சாமிகவிராயர் முத்து
வீரியத்தையும் படித்துத் தழுவிக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணத்
தோன்றுகிறது.
* நூலுள் (பக். 61) 45-ஆம் சூத்திரம் இருப்பதையும்
பி. வி. 49 என்று
திருத்தி வாசிக்க வேண்டும்.
|