என்று ‘புலம்புதலும்’ ஓரிடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு அதிகாரத்தையும் மூன்று மூன்று இயலாகப் பிரித்துப் பேசும் மரபு முத்து வீரியத்தின் செல்வாக்கினால் இருக்கலாமோ என்று ஐயுற
வேண்டியுள்ளது.
சுவாமிநாதம் பிற இலக்கண நூல்களைப் பின்பற்றி எழுந்ததாயினும் தனக்கென சில புதுமைகளையும் உடையது. அவையே அந்த நூலின்
தனிச்சிறப்பாக அமைந்து சாமி கவிராயர் இந்த இலக்கணத்தை எழுத முக்கிய காரணமாக இருந்திருக்கலாம். நூலின் புதுமையை இரண்டு வகையாகப் பிரித்து
விளக்கப்படுகிறது. ஒன்று மொழியியல் கோட்பாட்டுப் புதுமை; மற்றொன்று தமிழ்மொழி அமைப்பு பற்றிய புதுமை.
5. 2. 1. மொழியியல் கோட்பாட்டுப் புதுமை
பிறப்பியல்:
எல்லா தமிழ் இலக்கண ஆசிரியர்களும் நெஞ்சு, மிடறு, தலை, பல், இதழ், அண்ணம், மூக்கு ஆகிய எட்டு உறுப்புக்களையும் இருபெரும்
பிரிவாகப் பிரித்துள்ளார்கள். தொல்காப்பியர் நெஞ்சு, மிடறு, தலை ஆகிய மூன்றை ஒரு பிரிவாகவும் ஏனையவற்றை மற்றொரு பிரிவாகவும்
|