xxxv
பிரித்துள்ளார் (தொல்
83). வீரசோழியர், நன்னூலார் போன்றோர் நெஞ்சு,
மிடறு, தலை, மூக்கு ஆகியவற்றை ஒரு பிரிவாகவும் ஏனையவற்றை மற்றொரு
பிரிவாகவும் பாகுபடுத்தியுள்ளார்கள் (வீரசோ. 6, நன். 74). ஆனால்
சாமிகவிராயரோ மூன்று வகைப்படுத்தி நெஞ்சை ஒரு வகையாகவும், மிடறு,
தலை (உச்சி), மூக்கு ஆகியவற்றை ஒருவகையாகவும், ஏனையவற்றை
மற்றொரு வகையாகவும் பிரித்துள்ளார்.
|
|
அணுவினான்
மூலவிந்தில் ஏழுநாதம் இலஞ்சிக் காய் உதானத்தொடு
நெஞ்சு அணுகி வெளிவாக் காற் பணியுமிடறு (உ)ச்சி, மூக்கு ஒலித்து நா, அண்ணம்
பல், இதழின்
வினையால் (16.1,2)
|
என்பது சுவாமிநாதம்.
நெஞ்சு என்பது நுரையீரலைக் (lung) குறிப்பதாகக் கொள்ளப்படுகிறது. நுரையீரல் சுருங்கி விரிவதால் காற்று வெளியேறுகிறது. மிடற்றில்தான்
அக்காற்று பேச்சொலியாக மாறுவதற்குரிய ஒலிப்புடைய ஒலி
(voiced
sounds), ஒலிப்பிலா ஒலி (voiceless sounds) என்ற மாற்றத்தை
அடைகின்றது. எனவே எல்லாப் பேச்சொலிகளுக்கும் நெஞ்சு பொதுவான
உறுப்பாக அமைந்திருப்பதால் அதைத் தனியே பிரித்துக் கூறிய திறம்
பாராட்டுதற்குரிய முறையில் அமைந்துள்ளது.
எழுத்தியல் :
பதமரபில்தான் சாமிகவிராயர் சில புதுமைகளைச் சுட்டிக்காட்டிச்
சென்றுள்ளார். பதவியல் சொல்லியல் (Morphology) ஆராய்ச்சியைச் சேர்ந்தபோதிலும் அதை எழுத்ததிகாரத்தின் ஒரு பகுதியாக விரித்துச் சொன்ன பெருமை பவணந்தியாரையே சாரும். பதவியல் புணர்ச்சிக்கு
முன்னோடியாக அமைந்தது. சொற்களின் புணர்ச்சி இலக்கணம் கூறுவதற்குச் சொற்களைப்பகுத்து பகுதி, விகுதி என்று பிரித்து அறிந்தால்தான் பகுபதத்திற்குள் நடைபெறும் புணர்ச்சியை அதாவது பதத்தோடு உருபு,விகுதி முதலியன
|
|