xxxvi

சேரும்பொழுது ஏற்படும் புணர்ச்சியை விளக்க முடியும். எனவே புணர்ச்சியை விளக்குவதற்கு ஒரு மொழியிலுள்ள எல்லா உருபன்களையும் (பகுதி, விகுதி, இடைநிலை) தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு உதவியாக இருப்பது பதவியல் நன்னூலார் வினைப்பகுதி, வினைவிகுதி, கால இடைநிலை ஆகியவற்றை மட்டுமே பதவியல் விளக்கிச்சென்றார். சாமி கவிராயர் இன்னும் ஒருபடிமேலே சென்று சாரியை, சந்தியில் ஏற்படும் பொது மாற்றங்களையும் பதமரபில் கூறிச்சென்றுள்ளார். பதமரபு என்பதை தமிழ் உருபன்களின் பட்டியலாக அமைத்துக் கொண்டு அந்த உருபன்களின் மாற்று வடிவத்தைப் புணர்ச்சி மரபில் சாமிகவிராயர் விளக்கிச்சென்றுள்ளார். அதனால்தான் நன்னூலார் பதவியலில் கூறிய வடமொழி-தமிழ் ஒற்றுமை வேற்றுமை ஆராய்ச்சிப் பகுதியை பதமரபில் சேர்த்துக்கொள்ளாது விட்டுவிட்டார்.

சொல்லியல் ஆராய்ச்சியில் மற்றுமொரு புதுமை மின்ன லெனத்தோன்றி மறைந்துள்ளது. ஓரிடத்தில் மட்டுமே அந்தப் புதுமை போற்றப்பட்டு  ஏனைய  இடங்களில் மரபு வழி நின்று விளக்கமே தரப்பட்டுள்ளது. இன்னொருவேடிக்கை, இப்புதுமை கரந்தைத் தமிழ்ச்சங்க பிரதியில்மட்டுமே காணப்படுகிறது. பி. பொ. பிரதியில் மரபு வழிமுறையே பின்பற்றப்பட்டுள்ளது.

பொதுவாக மொழியியலில் புணர்ச்சி என்பது சொல்லின் எல்லா மாற்று வடிவங்களையும் விளக்கிக்கூறாது, ஒலிக்கட்டுபாடு உடைய (phonologically conditioned) மாற்று வடிவங்களை அதாவது புணர்ச்சியால் ஒலிமாற்றம் ஏற்படும் மாற்று வடிவங்களை மட்டும் விளக்கும் பகுதியாகும். மாற்று வடிவங்களிடையே ஒலி ஒற்றுமையில்லாத வடிவங்களையும் வேறு வேறு வடிவமுடைய மாற்று வடிவங்களையும் சொல்லியலில் தொகுத்துக் கூறுவார்கள். இந்த முறையைப் பின்பற்றினால் இறந்தகால இடைநிலைகளான த், ட், ற், இன், இ, என்பவற்றில் த், இன் என்பவற்றைச் சொல்லியலிலும் ட், ற் ஆகியவற்றைப் புணரியலில் தகரத்தின் மாற்றுவடிவமாகவும்