என்று இரண்டு இடைநிலைகளுக்கும் உரிய மாற்று வடிவங்களைக் கூறுவது
தற்கால மொழியியலார் விளக்குவது போல உள்ளது.
இம்முறையைச் சொல்லியல் முழுமையும் பின்பற்றியிருந்தால்
சாமிகவிராயர் தமிழ் இலக்கண உலகில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்க
முடியும். ஆனால் அவ்வாறு செய்யாததால் நூலே போற்றப்படுவார்
இல்லாமலும் பதிப்பிப்பார் இல்லாமலும் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது.
பதமரபில் மேலும் ஒரு புதுக்கோட்பாட்டை நினைத்துப்
பார்த்திருக்கிறார். சொற்களில் எல்லா வடிவங்களும் மற்றொரு சொல்லோடு
புணரும்போதுதான் மாறுபடுவது என்பது கிடையாது. உறழ்ச்சியாக ஒன்றுக்கு
மேற்பட்ட வடிவங்கள் வழங்குவது எல்லா மொழியிலும் காணப்படும் பொது
இயல்பே. யாது என்ற சொல் அன் என்ற சாரியையோடு சேரும்போது யாத்
(அதாவது புணர்ச்சியில் உகரம் கெட்டு விடுவது) என்றவடிவத்தைப்பெறும்
இவற்றில் தொல்காப்பியம் யாது என்றோ இவற்றில் தொல்காப்பியம் யாவது
என்றோ கேட்கலாம். இங்கு யாவது உறழ்ச்சி வடிவம். உறழ்ச்சி வடிவங்களை
புணரியல்களில் விளக்கமுடியாது எனவே இந்த இரண்டு மாற்று வடிவங்களை
வேறுபடுத்திக் காட்ட புணர்ச்சி, விகாரம்
|