வன் உள்ளத்திலும் வேரூன்றி வளர்ந்திருந்தது.
அத்தகைய உணர்வு தேவையாயும் இருந்தது.
‘வேல்வடித்துக்
கொடுத்தல் கொல்லற்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம்
முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல்
காளைக்குக் கடனே’
என்பன போன்ற பாடல்கள் எழுந்தன.
காலப்போக்கில் நாட்டைக்
காக்கும் பொறுப்பு அவ்வக் காலத்தில் காவற்சாகாடுகைக்கும்
அரசற்கே உரியதாயது. காவலனும் அவனுக்கிருக்கும்
படைகளுமே அதனைச் செய்யும்
பொறுப்பை ஏற்றனர். ஆதலால்தான் போர்முறை பற்றிய
இலக்கணங்களும் நெகிழலாயின”
எனக் குறித்துள்ள கருத்து இவர்தம்
சிந்தனை யாழத்தைத் தெளிவுற விளக்குவதாகும்.
இனி, இத்தகு நூல்கள்
தமிழ் கற்பவர்கள் அனைவராலும் விரும்பிப் பெற்றுக்
கற்கப்படமாட்டா என்பதை நன்கறிவோம். எனவே, புலவர்
தேர்விற்கு
இது பாடமாக
அமையப் பெறுதல் வேண்டு மென்னும் விழைவு
ஒருபாலுடையேம். எனினும், அந்நோக்கோடு
நாம் இதனை வெளியிட முன்வரவில்லை. ஊதிய நோக்கம்
பெரிதின்றிப் பண்டைய
நூல்களைப் பேணிக் காத்தல் வேண்டு மென்னும்
பெருநோக்க மொன்றே குறிக்கொண்டு இதன்
முன்னர்ச்
சில நூல்களை வெளியிட்டிருத்தல் போன்றே இந்நூலையும்
வெளியிட்டுள்ளோம்.
ஆயினும், தமிழைப்
போற்றுதல் தங்கள் தலையாய பணிகளுள் முதன்மையானதாகக்
கொண்டு
கோலோச்சி வரும் தமிழக அரசினர் இத்தகு பணிகளுக்கு
இயன்ற வகையில்
பொருளுதவி புரிதல் வேண்டும். நூலகப் பொறுப்பாளர்கள்,
தமிழார்வலர்களில் பொருள்
வளம் வாய்க்கப் பெற்றவர் ஆகியோர் இந்நற்பணிக்கு
உறுதுணையாக நிற்கவும் வேண்டும்.
‘உள்ளுவதெல்லாம்
உயர்வுள்ளல்’ என்னும் அறிவுரைக் கிணங்கத் தமிழின்
உயர்வே
கருதித் தொண்டாற்றும் எம்முயற்சிக்குத் துணை
புரியுமாறு இறைவன் திருவருளை
வழுத்துகின்றோம்.
இதன் முதற் பதிப்பை
1889ஆம் ஆண்டில் பிழையின்றி அழகியதாக சென்னை
அல்பீனியன் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்ட
திரு. பழனியாண்டி அவர்கட்கும், அதற்கு
நல்லுரை
|