வரும் என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாசிரியர் புறநிலை,
கைக்கிளை ஆகிய
இருபொருளில்
வரும் என்று கூறுகின்றார்.
ஒழிபியல்: இவ்வியலுள்
சில எழுத்துக்கள் அலகு பெறுமாறும், சீரும் தளையும்,
செய்யுளகத்து நிற்குமாறும், அடிமயக்கம், வண்ணங்களின்
வகை, பத்து வகைக் குற்றங்கள்,
பாட்டியல் இலக்கணம் ஆகியவைகளும்
விரிவாக ஆராயப்பட்டுள்ளன. இவற்றுள் வண்ணமும்
பாட்டியல் இலக்கணமும் ஒழிந்தன காரிகை ஆசிரியரைத்
தழுவி உரைத்தனவாகும்.
தொல்காப்பியர் வண்ணம் இருபதென்பர். காரிகை
உரையாசிரியர் நூறு என்பர். இவ்வாசிரியர்
தொல்காப்பியரைத் தழுவி வண்ணம்
இருபது என்றனர். ஐந்திலக்கண நூல்களில் இலக்கண
விளக்கத்திலும் தொன்னூல் விளக்கத்திலும் பாட்டியல்
இலக்கணம் உள்ளமை போன்றே
இந்நூலிலும் உள்ளது. இலக்கண விளக்க ஆசிரியர் பாட்டியலைத்
தனி இயலாகக் கொண்டார்.
இவர் தொன்னூல் விளக்க ஆசிரியர்
போல யாப்பிலக்கணத்தின் ஒரு பகுதியாகக்
கூறியுள்ளார்.
இதன்கண் நான்கு
பாக்களுக்குமுரிய நாள், கிரகம், நிலம், குலம், நிறம்,
இராசி
ஆகியவைகளும்,
ஆசுகவி முதலிய கவிஞர்களின் இயல்பும், ஒரு பாவின்
முதற்சீர் எப்படி
அமைதல் வேண்டும் என்ற வரையறையும், 90 வகைப் பிரபந்தங்களின்
இயல்பும்
கூறப்பட்டுள்ளன. இத்தகைய நியதிகள் இடையில் ஏற்பட்டனவே.
அவ்வாறே இடையில்
மறைந்து விட்டன. உள்ளத்துணர்வை வடித்துக் காட்டும்
செய்யுள்களுக்கு இத்துணை
வரையறை தேவையற்றதாகும். பிரபந்தங்கள்--நூல்கள்.
இத்தகைய பெயர் பெறுதற்குரியன
இவர்கள் கூறும் பிரபந்தங்களுள் சிலவே தகுதியுடையன.
ஆதலின், இவை காலப்போக்கில்
நிலைபெறாதொழிந்தன.
அணியதிகாரம்: இது
சொல்லணியியல், பொருளணியியல், செய்யுளணியியல்
என்னும் மூன்று
பிரிவுகளை யுடையது. தண்டியலங்கார ஆசிரியர் கூறிய
இயல்முறை
இதன்கண் தலைகீழாக மாறியுள்ளது.
சொல்லணியியல்:
இவ்வியலில் மடக்கின் வகை விரிவாகவும், சித்திரக்கவிகளின்
அமைப்புச் சுருக்கமாகவும் கூறப்பட்டுள்ளது.
பொருளணியியல்:
இவ்வியலில்
58 அணிகள் கூறப்பட்டுள்ளன. பலபடப்புனைவணி,
கூடாமையணி, தகுதியின்மையணி, தகுதியணி, பெருமையணி,
சிறுமையணி,
ஒன்றற்கொன்றுதவி
|