iv

அவற்றின் இனங்களையும் விளக்கிக் கூறும் ; பாட்டியல்களோ பிரபந்தங்களின் வகையினையும், அவற்றின் இலக்கணங்களையும், அவற்றைப்பாடவேண்டிய முறையையும், பாடுதற்குரிய நால்வகை வருணத்தாரையும், அவர்களுடைய இயல்புகளையும், பாட்டுடைத் தலைவர் நூல் கேட்கவேண்டிய முறையையும், அரங்கேற்றுதற்குரிய அவையின் இயல்பினையும், புலவர்களின் வகையினையும் விரிவாகக் கூறும்.      

தமிழ் மொழியில் இதுவரையில் பல பாட்டியல்கள் அச்சேறி வெளிவந்துள்ளன. வெளிவாராதனவும் பலவுள. அவற்றுள் சில அழிந்தும் போயின. அவற்றின் பெயர்களும் சில சூத்திரங்களுமே இ்ப்பொழுது நமக்குத் தெரிய வருகின்றன.

*தத்தாத்திரேயர் பாட்டியல் என்பது பெயரளவில் மட்டும் இன்று அறியக் கிடக்கின்றது.பண்டாரப் பாட்டியலின் சில சூத்திரங்களே இப்போது கிடைத்துள்ளன. அவையும் வெளிவரவில்லை.
பிரபந்தத் திரட்டு, பிரபந்த தீபம் என்பன முற்றிலும் கிடைத்துள்ளன எனினும் இன்னும் அச்சிடப் பெறவில்லை.

     

நவநீதப் பாட்டியல் என்னும் இந்நூல் நவநீத நடனார் என்னும் புலவர் பெருமானால் இயற்றப் பெற்றதாகும். இது பொருத்தவியல், செய்யுண் மொழியியல், பொது மொழியியல் என்னும் மூன்று உறுப்புக்களையுடையது. இதன்கண் இலக்கணம் கூறப்பட்ட பிரபந்தங்களின் பெயர்களை 93-ஆம் பக்கத்திற் காணலாம். இதன் சூத்திரங்கள் கட்டளைக் கலித்துறையினால் அமைந்தவை.

முதலில் இலக்கண நூல்கள் நூற்பாவாலும் வெண்பாவாலும் இயற்றப் பெற்றன. பிற்காலத்தில் கட்டளைக் கலித்துறையால் இயற்றப்படும் வழக்கம் தோன்றியது.யாப்பருங்கலக் காரிகை, வீரசோழியம், களவியற் காரிகை முதலியன கட்டளைக் கலித்துறையால் ஆனவை. நூல்களில் அடங்கியுள்ள கிரந்தங்களின் கணக்கை எடுத்துக் கூறுவது வடமொழியை ஒட்டி எழுந்த வழக்கமாகும். இந்தக் கணக்கெடுப்பதற்குக் கட்டளைக் கலித்துறை உதவுகிறது. நூல்களில் இடைச் செருகல்கள் நேராவண்ணம் ஆசிரியர்கள் சூத்திரங்களின் கணக்கைக் கூறுவதும், நூலை அந்தாதித் தொடையால் அமைப்பதும், இயல்களின் ஈற்றில் முதனினைப் புச்


* தம் ஆசிரியருள் ஒருவரான செங்கணம் ஸ்ரீவிருத்தாசல ரெட்டியா ரவர்களிடம் இந்நூலைப் பாடங் கேட்டிருப்பதாகவும், இது, விருத்தங்களால் அமைந்துள்ளதென்றும் டாக்டர் ஐயரவர்கள், ‘சங்கத் தமிழும், பிற்காலத் தமிழும்’ என்னும் நூலில் தெரிவித்திருக்கிறார்கள்.