viii

என்ற பிறைக்குறிகளில் புலப்படுத்தியுமுள்ளோம். உரையில் ஐயமாக உள்ள இடங்களை வினாக் குறியிட்டுக் காட்டியுள்ளோம்.

டாக்டர் ஐயரவர்கள் தாம் அச்சிடவேண்டிய நூல்களுள் இதனை ஒன்றாகக் குறித்து வைத்திருத்ததும், இதுவரை வெளிவந்த அச்சுப் புத்தகங்களுள் முழுப்பாகமும் உரைகளுடன் இல்லாமையுமே இப்பதிப்பை நாங்கள் வெளியிடக் காரணமாயின. அவர்கள் காலத்திலேயே இது நிறைவேறியிருப்பி்ன் மிகச் செவ்விதாக அமைந்திருக்கும் என்று நாங்கள் உரைப்பது மிகையாகும்.

ஐயரவர்கள் பெயரால் அடையாற்றில் நிறுவியிருக்கும் நூல் நிலையத்தின் இரண்டாம் வெளியீடாக இப்போது இது வெளிவருகிறது.

இந்நூல் நிலையத்துக்குப் போதிய நிதி இல்லாமையால் நூல்கள் வெளியிடும் பொறுப்பு முழுவதையும் இந்நூல் நிலையத்தின் அத்யக்ஷரும், அடையாறு கலாக்ஷேத்திரத்தி்ன் தலைவருமாகிய ஸ்ரீமதி ருக்மிணி தேவியாரவர்கள ஏற்றுக் கொண்டுள்ளார்கள். தமிழ் மொழியினிடத்து மிக்க அன்பு கொண்டு அதன் வளர்ச்சிக்காக அருந்தொண்டாற்றி வரும் அவர்களுக்குத் தமிழுலகம் பெரிதும் கடமைப் பட்டுள்ளது.      வேண்டிய ஆதரவு இருந்தால் இன்னும் வெளிவர வேண்டிய நூல்கள் ஒவ்வொன்றாக வெளிவரும் என்பதை நாங்கள் தமிழன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

இந்நூல் பதிப்பிக்கப்பெற்று வருகையில் அவ்வப்போது பல ஆலோசனைகள் கூறியும் பல திருத்தங்களைச் செய்து கொடுத்தும் உதவிய சென்னை, கிறிஸ்டியன் காலேஜ் ஹைஸ்கூல் தமிழாசிரியராகிய ஸ்ரீ வி.மு. சுப்பிரமணிய ஐயர் B.O.L. அவர்களுக்கு நாங்கள் மிக்க நன்றி பாராட்டுகிறோம்.

மகாகோபாத்தியாய டாக்டர்
  உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம்
அடையாறு
10-10-44
}
}
}
இங்ஙனம்

S.கலியாணசுந்தர ஐயர்,

ச.கு. கணபதி ஐயர்.