மாறுபடுகின்றன. ஆதலால்
அவை இப்பதிப்பில் பிரதிபேதமாகச் சேர்க்கப்
பெற்றுள்ளன. அவ்வுரையைப் படிக்கும் போது பல விடங்களில்
பிரதிபேதத்தை மூல பாடமாகக் கொள்ள வேண்டும். இப்பதிப்பில் அவ்வுரை*
உரை II எனக் குறிக்கப்பட்டுள்ளது. உரை I உள்ள பிரதியில் இல்லாத கலித்துறைகளை உடுக் குறி ( * )
இட்டும், உரை II உள்ள பிரதியில் இல்லாத கலித் துறைகளைச் சிலுவைக்குறி
(+) யிட்டும் தெரிவித்துள்ளோம். முதலுரை கூறும் விஷயத்தையே இரண்டாம்
உரையும் கூறு மிடங்களைப் புள்ளிகள் இட்டு நீக்கி அவசியமான பகுதிகளை
மட்டும் காட்டியுள்ளோம். இவ்வுரைப் பிரதிகளினால் மூல பாடம்
பலவகையில் திருத்த முற்றிருக்கிறது. இரண்டாம் உரைப்படி அமைந்த
மூலப்பிரதி யொன்றும் இப்பதிப்பிற்கு உதவியாக இருந்தது. மூலத்திலும்
உரையிலும் காணப்படும் சில தொடர்கள் வழுவுள்ளனவாகத் தோன்றின
மையின் அவற்றின் திருத்தங்களைச் சில விடங்களில் குறிப்புரையில்
காட்டியுள்ளோம். 85-ஆம் கலித்துறையின் ஈற்றுச் சீர் ‘உவமைகளே’
என்றிருப்பின் சிறப்புடையதாகும். ஆயினும் அது கிடைத்த எல்லாப்
பிரதிகளிலும் ‘உறுப்புக்களே’ என்று காணப்படுகிறது. 93-ஆம் சூத்திரத்தின்
உண்மை வடிவம் புலப்படவில்லை. மேற்கோட் சூத்திரங்களிலும் பலவற்றின்
உண்மை வடிவம் புலனாகவில்லை. மேற் கோட் சூத்திரங்களுட் பலவற்றைத்
தந்து ‘என்பது தண்டி யலங்காரம்’ என்று ஒருமை தோன்ற எழுதப்
பெற்றுள்ள இடங்கள் பல. அவற்றை மாற்ற வேண்டுவது அவசிய மாயினும்
அக்காலத்து உரைநடை புலப்படுவதற்காக அவை அங்ஙனமே பதிப்பிக்கப்
பெற்றுள்ளன. 92-ஆம் சூத்திரவுரையில் ‘மாபுராணம்’ என்ற பெயர்
காணப்படுகிறது. அந்நூலினின்றும் எடுத்துக் காட்ட வேண்டிய மேற் கோட்
சூத்திரம் பிரதி செய்தவரால் எழுதப்படாமல் விட்டுப் போனது வருந்தத்தக்கது.
உரையில் மிகையாகத் தோன்றும் பகுதியை [ ] என்ற
பகரக் குறிகளில் அமைத்தும் முதலுரையிலும் மேற்கோட் சூத்திரங்களிலும் விட்டுப் போன
பகுதியை..................... என்ற புள்ளிகளிட்டுக் காட்டியும், விட்டுப்போனவற்றுள்
தெரிந்த வற்றை ( )
*இவ் வுரையின் 18 கலித்துறைகள் அடங்கிய ஒரு பகுதி ‘நவநீதப்
பாட்டியல்’ என்ற பெயருடன் ‘பாட்டியற் கொத்து’ என்ற நூலில் சேர்க்கப்
பெற்று 1908-ஆம் ஆண்டில் வெளி வந்துள்ளது.
|