இரண்டு உரைகளுள் கடிதப்
பிரதியிலுள்ளது விரிவான உரை; பல மேற்கோட் சூத்திரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அவ் வுரையால் தெரியவரும்
நூல்களாவன:- அகத்தியனார் ஆனந்த வோத்து (84-6), அணியியல் (105), அவிநயனார் கலாவியல் (96), இந்திர காளியம் (6, 22-3, 92), கல்லாடம் (35, 83, 93), கல்லாடனார் கலாவியல் (92), கல்லாடனார் வெண்பா (92), செய்யுள் வகைமை (33, 36, 42, 68, 96, 99, 104), திருப்பிரவாசிரியர் தூக்கியல் (104),
தொல்காப்பியனார் [செய்த பாட்டியல்] (21), தொல்லாசிரியர் [செய்தது] (101),
பருணர் பாட்டியல் (3, 7, 26, 31, 73, 84, 87, 104-5), பிங்கல சரிதை (66), பொய்கையார், பொய்கையார் கலாவியல், பொய்கையார் பாட்டியல் (10, 31, 44, 75, 81, 92), மாமூலம் (5, 6, 22, 35, 68, 82, 87, 104), முந்திரியார் வஞ்சினம் (67), முள்ளியார் கவித்தொகை (34-6, 38, 40, 48), வாமன சரிதை
(66.). இவற்றுள் *பருணர் பாட்டியல் சில விடங்களில் பருணப் பாட்டியல்,
பருணிதர் பாட்டியல் என்றும் காணப்படுகிறது. நவநீத நடனார் தம் நூலுள்
இரண்டு இடங்களில் (46, 96) ‘தொன்னூல் பருணிதர்’ என்ற தொடரை
ஆண்டுள்ளார். பன்னிரு பாட்டியலில் பரணர்
செய்தனவாகப் பல
சூத்திரங்கள் காணப்படுகின்றன. அவற்றுள், ‘காப்பு முத லெடுக்கும்’ (184)
என்னும் சூத்திரம் இந்நூல் 26-ஆம் சூத்திரத்தின் உரையில் பருணர்
பாட்டியலைச் சேர்ந்ததாகக் காணப்படுகிறது.
உரையுள்ள சுவடிகளுள் ஒன்றில், பலவிடங்களில் பிழை மலிந்துள்ளது,
விட்டுப் போன தொடர்களும் பல. இதனால் உரையிலும் மூலத்திலும்
காணப்படும் ஐயங்கள் இன்னும் விளக்க மடைவதற்குரிய நிலையில் உள்ளன.
விரிவான இந்த உரையை இப்பதிப்பில் ‘உரை I’ என்று குறித்துள்ளோம்.
இவ்வுரை யாசிரியர் 66 ஆங் கலித்துறைக்கு உரை எழுதும் போது
தண்டியலங்காரத்திலிருந்து மேற்கோள் காட்டியிருப்பதால்
அந்நூலாசிரியருக்குப் பிற்பட்டவராக இருக்கலாமென்று தோன்றுகிறது.
மற்றோர் உரை அத்துணைச் சிறப்பினதன்று, அதில்
நூல் 81
கலித்துறைகளைக் கொண்டு முடிந்துள்ளது. உரை I இல் உள்ள
மூலபாடத்தோடு அதில் உள்ள சில பாடங்கள்
* ‘சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும்’ என்னும் நூலில் வாருணப்
பாட்டியல் என்னும் நூலொன்று கூறப்பட்டுள்ளது; அஃது இதுதானோ வேறோ
என்பது தெரியவில்லை. |