2

வாசலை, மாயி, வராகி, நாரணி. இப்படிச் சொல்லப்பட்ட பதினாறு சத்திகளில் அதிபாக்கியமுள்ள மாலினி சத்தி என்பாளையே இலக்கணங்களுக்கு முன்னிலையாக வைப்பது என்று அறிக.

(குறிப்பு). பாட்டில் - பிரபந்த இலக்கணம் ; பாட்டு - பிரபந்தம் ஆகுபெயர், இயல்- இலக்கணம். பதினாறு சத்திகள் ; ஜயை; விஜயை, அசிசை, பராசிதை, நிவிருத்தி, பிரதிட்டை, வித்தியை, சாந்தி, இந்திகை, தீபிகை, ரோஸிகை, மோஷிகை, வியோமரூபை, அனந்தை, அனாதை, அனாஸ்ததை ; மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் சொல்லகராதி(1)

அவையடக்கம்.
   
2. *சகத்தினில் முத்தமிழ் தன்னையுண் டாக்கிமுச்
                                 சங்கத்திலும்
அகத்திய மாமுனி யாக்கிய பாட்டியல் ஆனபௌவம்
நீகழ்த்துகை மின்மினி யாதித் தனுக்கு நிகரொக்குமென்
றுகப்பது 1போலுமன் றேபுல வோர்முன் உரைப்பதுவே.

(உரை II). எ - து); அகத்திய பகவான் முதற்சங்கம் கபாடபுரத்தில் உண்டாக்கிய காலத்திற் சங்கப்பலகை ஏறினவர்கள் நாலாயிரத்துத் தொளாயிரவரும், நடுங்கங்கம் உத்தர மதுரையிலுண்டாக்கிய காலத்தில் சங்கப்பலகை ஏறியவர் நானூற்றுத் தொண்ணூற்றுவரும் கடைச் சங்கம் சிறு மதுரையிலுண்டாக்கிய காலத்திற் சங்கப்பலகை ஏறினவர்கள் நாற்பத்தொன்பதின்மருமாக முச்சங்கத்திலும் ஏறின புலவர்கள் ஐயாயிரத்து நானூற்று முப்பத்தொன்பதினமர்களால் ஆராயப்பட்ட இந்தப் பாட்டியலை நான் உரைப்பது எதுபோலவெனில், ஆதித்தன் பிராகாசத்துக்கு மின்மினி வண்டு சமமென்று உவக்குமாறு போலவாம் எ று.

(கு-ரை.), முதற்சங்கம் கடல்கொண்ட மதுரையிலும் இடைச்சங்கம் கபாடபுரத்திலும் இருந்தனவென்பதே பெருவழக்கு. புலவர் தொகையும் வேறுபடும்.

(பி-ம்.) 1 ‘போலுமென்றே’


* இக்குறியிட்ட சூத்திரங்கள் உரை I பிரதியில் இல்லை.